உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது!

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஆம், உண்மையிலேயே உலகம் அழியப்போகிறது. நாசா அழியாது என்று உத்தரவாதம் கொடுத்தாலும், தமிழ்நாடு புதுவை அறிவியல் இயக்கத்தவர்கள் கூரை மீது நின்று உலகம் அழியது என கத்தோ கத்து என கூவினாலும். உலகம் அழியத்தான் போகிறது.

டிசம்பர் 21 அழியபோகிறது என்று சொல்வது புரளி தான் .. வீண் வதந்தி தான். மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஏய்க்கும் செயல்தான். பீதி ஏற்படுத்தும் சமூக விரோத செயல்தான் என்றாலும் உள்ளபடியே உலகம் அழியத்தான் போகிறது,

எப்படி அழியப்போகிறது, எப்போது அழியப்போகிறது என்பதை பார்பதற்கு முன்னர், இந்த டிசம்பர் 21 புரளியை சற்றே அலசி பார்த்துவிடுவோம்.

உங்கள் வீட்டில் தினசரி காலண்டர் இருக்கிறதா? அதில் ஒவ்வோவொரு நாளும் நாள் எட்டை கிழிப்போம். வருட கடைசியில். அதாவது டிசம்பர் 31இல் கடைசியாக ஒரேஒரு தின எடு தான் இருக்கும். அப்போது என செய்கிறோம்? ஐயையோ காலம் தீர்ந்துவிட்டது; உலகம் அழியப்போகிறது என்றா முடிவுக்கு வருகிறோம். சிலர் கடைக்கு போய் கண்ணியமாக புதிய காலண்டர் வாங்குவார்கள். சிலர் ஓசி காலண்டர் எங்கு கிடைக்கும் என்று அலைவார்கள். அவ்வளவு தான்.

ஆண்டு என்ற கால அளவு போல பண்டைய பண்பாட்டில் யுகம் என்ற கருதும் இருந்தது. சுமார் ஐந்து ஆண்டுகள் கொண்டது ஒரு யுகம். ஆரியபட்ட காலத்தில் தான் லட்சம் ஆண்டுகள் கொண்ட மகா யுகம் என்ற கருத்து உருவானது. அது இருக்கட்டும். ஐந்து ஆண்டுகள் கொண்ட யுகம் என்பது என்ன?

இன்று இரவு நிலவை ஒரு விண்மீன் அருகில் பார்க்கிறோம் என கொள்வோம். நாளை நிலவு அதே விண்மீன் அருகில் இருக்காது. இருபத்தி ஏழு நாள் கழித்து தான் அதே விண்மீன் அருகில் நிலவு மறுபடி நிலை கொள்ளும். ஒவ்வொரு னாலும் நிலவு அமையும் நிலைக்கு அருகே உள்ள விண்மீன் களை தான் நட்சதிரம் என்பார். அதாவது இருபத்தி ஏழு நட்சத்திரம். இதை நட்சதிர மாதம் என்பார். இன்று முழு நிலவு என்றால் சுமார் முப்பது நாள் கழித்து தான் மறுபடி முழு நிலவு வரும். இது திங்கள் எனப்படும் மாதம்.

ஆண்டு என்பது என்ன? இன்று நமது தலைக்கு மேலே உச்சியில் சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு ஒரு விண்மீன் தெரிகிறது என்றால் அதே விண்மீன் நமது தலைக்கு மேலே நாளை இரவு பன்னிரண்டு மணிக்கு இருக்காது. நான்கு நிமிடம் முன்பே அந்த விண்மீன் தலைக்கு மேல உச்சிக்கு வந்துவிடும். மறுபடி சுமார் 365 நாட்கள் கழித்து தான் அதே விண்மீன் நமக்கு தலைக்கு மேலே சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு வரும். இது தான் ஆண்டு.

சரி. ஒரு நாள் குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட விண்மீன் நமக்கு தலைக்கு மேலே சரியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு இருக்கிறது, நிலவு முழு நிலவு என வைத்து கொள்வோம். இந்த மூன்று நிலையும் மறுபடி அதே போல வருவது எப்போது என்று பார்த்தால் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து வரும். இதை தான் ஒரு யுகம் என அந்த காலத்தில் கூறினார்கள்.

இந்த வின் இயக்கத்தோடு வேறு வான் பொருட்களின் இயக்கத்தையும் சேர்க்கலாம். புதன் வெள்ளி நிலவு, வியாழன் சனி சூரியன் நிலவின் வெட்டு புள்ளி (ராகு/ கேது) நட்சத்திரம் என எல்லாம் ஒரு நாள் நேர் கோட்டில் இருந்தால் அதே வின் நிலையே எந்த பிசகும் இன்றி மறுபடி அடைய சுமார் 1.4 லட்சம் வருடம்- மகா யுகம் எடுக்கும் என்றார் ஆரியபட்டர்.

ஐந்து ஆண்டு யுக கணக்கோடு வியாழன் கோளின் பன்னிரெண்டு வருட சுழற்சியையும் கணக்கில் கொண்டால் நட்சதிரம், நிலவின் பிறை நிலை, தலைக்கு மேல் உள்ள விண்மீன் மற்றும் வியாழன் முதலிய அதே நிலைக்கு மறுபடி திரும்ப 5 x 12 = 60  ஆண்டுகள் ஆகும், இதுவே ஆறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு கணக்கு.

இது போல மாயன் பன்பட்டினர் பல்வேறு வான் செய்திகளை தொகுத்தனர். குறிப்பாக வெள்ளி கோள் அவர்களுக்கு சிறப்பானது. அதன் இயக்கத்தை கணக்கில் கொண்டு அதே வான் நிலை மறுபடி ஏற்படும் காலம் வரை நீண்ட ஒரு காலண்டரை தயாரித்தனர். அந்த நீண்ட மாயன் காலண்டர் தான் டிசம்பர் 21 உடன் முடியபோகிறது என சிலர் கருதுகின்றார். மாயன் கலாச்சாரத்தை ஆராயும் சிலர் இதனை ஏற்பதில்லை; இதில் பிசகு உள்ளது என கூறுபவர்களும் உள்ளனர்.

 

இந்திய பண்பாட்டில் மகா யுகம் முடிந்ததும் பிரளயம் வரும் என்று புராண கருத்து உள்ளது போல மாயன் புராண கருத்தில் நேபுரு எனும் கோள் வந்து பூமியில் மோதி உலகம் அழியும் என்பது தான் இந்த பீதிக்கு காரணம். இங்கே ஒன்றை கூடுதலாக கூற வேண்டும். ஆரியபட்டரின் ஆரிய பாடியம் என்ற நூலில் மகயுகம் குறித்து கணக்கு உள்ளது; ஆனால் பிரளயம் போன்ற போலி கருத்துகள் இல்லை. அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் புறமான புராண கருத்துகளில் தான் பிரளயம் போன்ற கருத்துகள் உள்ளது எனபதும் கவனிக்க தக்கது.

அதுபோல அந்த கால மாயன் கலாச்சாரத்தில் கைதேர்ந்த வானவியல் நிபுணர்கள் இருந்திருக்கலாம். அவர்கள் நீண்ட மாயன் காலண்டரை உருவாகியிருக்கலாம். ஆனால் அதே கலாச்சாரத்தை சார்ந்த சிலர் உலகம் அழியும் என்பது போன்ற புராண கருத்துகளை பரப்பி இருக்கலாம். அவ்வளவே.

டிசம்பர் 21 போய் 22, 23 …எல்லாம் வந்து விட்டது. எனவே உலகம் அழியபோகிறது என்பது போலி என கூற தேவையில்லை.

 

 

ஆனாலும் உலகம் அழியபோகிறது…

ஒன்று; இன்று நாம் உலகளவில் வகை தொகை இல்லமால் வளிமண்டலத்தில் கார்பன் மாசை ஏற்படுத்தி வருகிறோம். இந்த கார்பன் மாசு வரம்பை மீறினால் உலகம் அழியும்- அதாவது உயிர் கோலம் அழியும். உயிர் அற்ற வெறும் கல்லும் மண்ணும் இருக்கும் தான். உயிர் அற்ற அந்த கோளம் பூமியாக இருக்கலாம் ஆனால் உலகமாக இருக்காது அல்லவா? எனவே நாம் இன்றே செயல் பட துவங்கவில்லை என்றால் உலகம் அழியும்.

இரண்டு. உலகம் முழுவதும் உள்ள ராணுவ தளவாடங்கள். குறிப்பாக அணு ஆயுதங்கள். ஒருமுறை அல்ல பல முறை இந்த உலகை அழிக்க வல்லது. சமிபத்தில் அமெரிக்க அரசு தனது கடந்த கால த்ஸ்வேசுகளை வெளியிட்ட போது பனிப்போர் சமயத்தில் உள்ளபடியே அமெரிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்த முனைந்தது என்பது வெளிப்பட்டுள்ளது. ஆகவே இன்றும் அணு ஆயுத அச்சுறுத்தல் இருந்தபடியே உள்ளது, எனவே உலக போர் மூண்டால் எளிதில் இந்த உலகம் அழிந்து விடலாம்.

மூன்று சுமார் ஐநூறு கோடி வருடம் காத்திருந்தால் இயற்கையாகவே புவி அழியும். சூரியன் சிவப்பு ராட்சஸ விண்மீன் என உருவு எடுக்கும். அந்த சமயத்தில் சூரியனின் உருவம் ஊதிய பலூன் போல விரிந்து புவிக்கு அருகே வந்து விடும். புவியை சூரியன் கபளீகரம் செய்துவிட்டாலும் செய்துவிடலாம். அப்போது… ஐநூறு று று று று று று கோடி டி டி டி டி டி டி டி டி டி வருடம் சென்ற பின்னர் புவி அழிந்து விடும்.

ஆம் உலகம் அழியத்தான் போகிறது…

த.வி.வெங்கடேஷ்வரன்

So, what do you think ?