சீறும் சிறுத்தை(Cheeta)

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

1947 ஆம் ஆண்டில் டிசம்பர் வாக்கில் ஒர் இரவில் மலை பாதையில் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது ஒரு கார். சாலையின் இருமாங்கும் அடர்ந்த வன பகுதி. கும் இருட்டில் காரின் முகப்பு ஒளி சாலையை ஒளி வெள்ளத்தில் குளிப்பாட்டி சென்றது. தீடிர் என வளைந்த சாலையில் திரும்பிய காரின்  முகப்பு விளக்கின் ஒளி வெள்ளத்தில் சடார் என கண் கூசி அயர்ந்து நின்றன சாலை ஓர பாறையின் மீது அமர்ந்திருந்த மூன்று சிறுத்தை குட்டிகள்.

சிறுத்தைகளை கண்டதும் காரிலிருந்து இறங்கினார் பஸ்தார் பகுதியின் சர்குஜா மஹாராஜா ராமானுஜ் பிரபாத் சிங். களிப்பில் ஆழ்ந்த மகாராஜா தனது துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை சுட்டார். ஒரு குண்டு ஒரு சிறுத்தையை கொன்றது. இரண்டாவது குண்டு இரண்டாவது சிறுத்தையின் உடலில் பாய்ந்து பின்னர் மூன்றாவது சிறுத்தையையும் பலி கொண்டது. தனது மனைவியுடன் சண்டைபிடித்து அந்தபுரம் விட்டு வெளியேறிய மஹாராஜா கோபத்தில் இருந்தார்எனவும் அந்த வெறியில் தான்  இந்த மூன்று ஆண் சிறுத்தைகளை கொன்றார் எனவும் கூறப்படுகிறது.

மகாராஜா கொன்ற கடைசி மூன்று இந்திய சிறுத்தைகள்.

மகாராஜா கொன்ற கடைசி மூன்று இந்திய சிறுத்தைகள்.

 அது உண்மையோ பொய்யோ தெரியாது ஆனால் இந்த மூன்று சிறுத்தைகள்(Cheeta) தான் இந்தியாவில் கடைசியாக தென்பட்ட சிறுத்தைகள். இந்த மூன்று சிறுத்தைகளின் மரணத்தோடு இந்தியாவில் சிறுத்தைகள் இல்லவே இல்லை என்று ஆகி போனது. இறுதியில் இந்திய அரசு 1952 ஆம் ஆண்டு சிறுத்தைகள் இந்தியாவில் இல்லை என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட்டது.

 வடமொழியில் புள்ளிகள் கொண்ட என்ற பொருள் படும் சித்ரகயா என்ற பெயர் தன் மருவி சிறுத்தை எனவும் ஆங்கிலத்தில் சீட்டா எனவும் அழைக்கப்படுகிறது. சிறுத்தைக்கு பெயர் தந்த இந்த இந்திய மண்ணில் இன்று சிறுத்தைகள் அறவே இல்லை.

சிறுத்தை

சிறுத்தை

 கூர்நகப்பாதம் கொண்டது சிறுத்தை. பூனை போல தனது விரல் நகங்களை சிறுத்தைகளால் உள்ளே இழுக்க முடியாது. எனவே பாதம் வளையாது. நெகிழ்வற்ற விரைப்பான பதம் கொண்ட சிறுத்தையால் சிறுத்தைபுலி எனப்படும் லீபோர்ட் போல மரம் ஏற முடியாது. மரம் ஏற முடியாமல் இருக்கலாம், ஆனால் புவியில் விரைவாக சடுதியில் ஓடும் விலங்கு சிறுத்தை. சுமார் ஐநூறு மீட்டர் வரை மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக் கூடியது சிறுத்தை. மூன்றே மூன்று வினாடியில் சிறுத்தை ஓட்டமில்லா நிலையிலிருந்தது மணிக்கு நூறு கிலோமீட்டர் என்ற வேகத்திற்கு முடுக்கு வேகம் பெற முடியும். இவ்வாறு தனது இரையை துரத்தி பிடித்து உண்ணும் திறம் பெற்றது சிறுத்தை. வெகு வேகமாக ஓடும் திறம் பெற்றிருந்தாலும் சிறுத்தையால் மனிதனின் கைகளிலிருந்து தப்ப முடியவில்லை. இந்தியாவில் உள்ள பல கற்கால குகைகளில் மனிதன் வரைந்து வைத்துள்ள ஓவியங்களில் காட்டு எருமை, சிங்கம், புலி வண்டு முதலிய விலங்குகளோடு சிறுத்தையும் காணப்படுகிறது. முகலாய மன்னர்கள் சிறுத்தையை வேட்டைக்காக வளர்த்தனர். வேட்டை நாய் போல, வளர்க்கப் பட்ட சிறுத்தையை கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடும் பற்பல முகலாய சித்திரங்கள் இதற்கு சான்று.

அக்பர் தனது பதிமூன்றாம் வயதில் ஒரு சிறுத்தையை பரிசாக பெற்றார். அவரது பேரார்வம் காரணமாக 1000 சிறுத்தைகளை வளர்த்தார். அவரது மகன் ஜஹாங்கிரும் சிறுத்தை மீது பற்று கொண்டு வளர்த்தார். முகலாய மன்னர்களின் இந்த போக்கினை வழி ஒற்றி பின்பற்றி ஏனைய மன்னர்களும் சிறுத்தையை வளர்க துவங்கினர். தமது ஆண்மை, பலம் முதலியவற்றை குறிக்கும் படியாக சிறுத்தை வளர்ப்பு அமைந்தது. முகலாய மன்னர்கள், குறு நிலா மன்னர்கள் என ஒவ்வொருவரும் தாமும் சிறுத்தையை வளர்ப்போம் என துவங்கியதும் சிறுத்தைக்கு பிடித்தது சனி. மன்னர்களின் சிறுத்தை தேவைகளை ஈடுகட்ட மேலும் மேலும் சிறுத்தைகளை காடுகளிலிருந்து பிடிக்கும் படி ஆகிற்று. ஒரு கட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தை இறக்குமதி செய்யப்பட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள். பரோடா சமஸ்தானம் தன் பங்கிற்கு சிறுத்தையை பிடிப்பது எப்படி, கூண்டில் அடிப்பது எப்படி, நாய் போல பழகுவது எப்படி, எந்த உணவு கொடுப்பது, எப்படி பராமரிப்பது என பல தகவல் அடங்கிய புத்தகம் ஒன்றை கூட பிரசுரித்து.

பண்டைய எகிப்திலே சிறுத்தைகள் பிடித்து வளர்க்க பட்டுள்ளன.

பண்டைய எகிப்திலே சிறுத்தைகள் பிடித்து வளர்க்க பட்டுள்ளன.

அக்பரின் வளர்ப்பில் சிறுத்தை

அக்பரின் வளர்ப்பில் சிறுத்தை

 நாய், யானை, மாடு முதலியவை வளர்ப்பு மிருகங்கள். இவை வளர்ப்பு நிலையிலும் குட்டி போடும். ஆனால் சிறுத்தையோ வளர்ப்பு நிலையில் குட்டி போடுவது இல்லை. எனவே சிறுத்தையை கூண்டில் அடைத்து இனபெருக்கம் செய்தல் எளிது அல்ல. ஆயிரம் சிறுத்தைகள் வைத்திருந்த அக்பர் கூண்டில் ஒரே ஒரு முறை தான் ஆண் சிறுத்தை பெண் சிறுத்தையை புணர்ந்து வளர்ப்பு நிலையில் பெண் சிறுத்தை சினை அடைந்து கூட்டி ஈன்றது. அதன் பின் 1957ஸ் அமெரிக்காவில் ஒரு உயிரியல் பூங்காவில் தான் வலப்பு நிலையில் சிறுத்தை குட்டி ஈனும் போக்கு பார்க்க பட்டத்து. தனியே தனது இயல்பு சுழலில் இருந்தால் மட்டுமே சிறுத்தை குட்டி போடும்; இனபெருக்கம் செய்யும்.எனவே சிறுத்தைகளை பிடித்து அடிப்பது என்பது ஒருவகையில் சிறுத்தை இனம் அழிய காரணமாக அமைந்தது.

மன்னர்கள் ஏற்படுத்திய தலைவலி ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சி இந்தியாவில் அமைந்த பின்னர் சிறுத்தைகளுக்கு திருகு வலியாக அவலமடைந்தது. மன்னர்கள் காட்டிலிருந்து சிறுத்தையை பிடித்து வளர்த்தார்கள்; ஆனால் ஆங்கில அதிகாரிகள் பொழுது போக்கிற்காக சிறுத்தை வேட்டையாட கிளம்பினர். தமது வீரத்தை வெளிபடுத்த ஒவ்வொரு ஆங்கில அதிகாரியும் கையில் துப்பாக்கியோடு காடு நோக்கி கிளம்பினர். புலி தான் அவர்களது முக்கிய குறி; புலி கிடைக்க வில்லை என்றல் சிறுத்தை என துரத்தி துரத்தி வேட்டையாடினர். பல ஆயிரம் தொகை கொண்ட சிறுத்தை வெகு சில ஆண்டுகளிலேயே சில  நூறு என குறைந்தது.

வேட்டைக்கு உதவும் படி பழக்க பட்ட சிறுத்தைகள்

வேட்டைக்கு உதவும் படி பழக்க பட்ட சிறுத்தைகள்

 ஒரு காலத்தில், சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆபிரிக்க, ஈரான், இந்திய என பரவியிருந்த சிறுத்தை இனம் இன்று ஆப்பிரிக்காவில் நமிபியா, கென்யா போட்ஸ்வானா தென் ஆப்ரிக்கா முதலிய பகுதிகளில் சுருங்கி விட்டது.ஈரானில் வெறும் நூறு சிறுத்தைகளும், ஆப்ரிக்காவில் வெறும் ஐயாயிரம் சிறுத்தைகளும் மட்டுமே இன்று எஞ்சி உள்ளன.

 புலி சிங்கம் போன்ற விலங்களை ஒப்பிட்டால் சிறுத்தை சற்றே சாதுவானது.  புலி சிங்கம் போல வேட்டையாடும் விலங்கு தான் சிறுத்தை என்றாலும் இவை கால்நடைகளை தீண்டாது. எனவே கிராமத்தில் ஆடுகள், மாடுகளுக்கு பொதுவே இவற்றால் ஆபத்து இல்லை. மனிதனையும் இவை தாக்குவது இல்லை. புற்காடுகளில் இயல்பில் வசிக்கும் சிறுத்தை தன் புல்வெளி காடுகளின் முக்கிய விலங்கு. வேட்டையாடும்.ஆண்டிலோப் மற்றும் கஸல் முதலிய மான் வகைகள், முயல் காட்டு பன்றி முதலியவை தான் சிறுத்தையின் இறை.

 பாலூட்டி விலங்குகளிலேயே வேகமாக ஓடுவது சிறுத்தை ஆகும். சிறுத்தைகள் பலவிதமான விலங்குகளை வேட்டையாடி உண்கின்றன. அவற்றில் முயல் மற்றும் சிறு பறவைகளும் அடங்கும். புலி சிங்கம் போன்றவை பதுங்கி பாய்ந்து தனது இரையை பிடிக்கும். ஆனால் சிறுத்தையோ வெகு வேகமாக ஓடி துரத்தி தனது இரையை பிடிக்கும்.  முதலில் தனியாக நிற்கும் ஒரு மிருகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். பின்னர், மிகச் சாதாரணமாக அவற்றின் அருகில் நடந்து சென்று திடீரென விரட்ட ஆரம்பிக்கின்றன. குறுகிய கால இடைவெளியில் விரைவாக முடுக்கு வேகம் பெற்று ஓடக்கூடிய திறன் பெற்றிருப்பதால் சட்டென்று தனது இரையை முழு பலத்தையும்

சேர்த்து விரட்டிப் பிடிக்கின்றன. இவற்றின் அதிவேக ஓட்டமும், திடீரென திரும்பி ஓடும் திறனும் தன் சில நோடிகளில் தனது இரையை வெற்றிகரமாக வேட்டையாட உதவுகிறது. இவற்றின் நீண்ட வால் வேகமாக ஓடும் போதும், ஓடிக்கொண்டே திரும்பும் போதும் கீழே விழாமல் தன்னை சமநிலை படுத்திக்கொள்ள உதவுகின்றன.

 புல்லை மிகுதியாக மேயும் விலங்குகளை சிறுத்தை உணவாக கொள்கிறது. சிறுத்தையின் இரையாக இவை அமைவதால் தான் புல்வெளி காடுகள் முற்றிலும் அழிந்து படமால் நிலைத்தன்மை அடையும். எனவே தான் சிறுத்தை இல்ல புல்வெளி காடுகளில் புற்களை மேயும் விலங்குகள் எந்த வித தலையும் இல்லாமல் பெருகிவிடும் அபயம் உள்ளது.

பொன் முட்டையிடும் வாதத்தை அறுத்த கதை போல, புல் மேயும் விலங்குகளின் தடையற்ற  பெருக்கத்தின் காரணமாக புல்வெளி காடுகளே அழியும் நிலைக்கு சென்றுவிடும். சிறுத்தைகள் இன்று இந்தியாவின் எந்த வனப் பகுதியிலும் ஒன்று கூட மிச்சம் இல்லை. உலகின் வேறு எந்த நாடுகளுக்கும் இல்லாத பெருமை இந்தியாவுக்கு இருந்தது. சிங்கம், புலி, சிறுத்தை மற்றும் சிறுத்தை புலி இந்த நான்கு விலங்குகளும் இந்தியா என்ற ஒரே தேசத்தில் வாழ்ந்தன.

இந்த விலங்குகளில் சிறுத்தை இன்று இந்தியாவில் இல்லை. இந்த குறையை போக்க Project Cheeta என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.உள்ளபடியே சிறுத்தைகள் அழிவு என்பது இந்திய புற்காடுகளின் அழிவிற்கு இட்டு சென்றுள்ளத்து. புற்காடுகளில் உயரின பெருக்கத்தை நிலை நிறுத்த சிறுத்தைகள் அவசியம். எனவே தான் ஆப்ரிக்கா விலிருந்து பத்து சிறுத்தைகளை இறகுக்குமதி செய்து மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ பல்பூர் வன விலங்கு சரணாலயம் மற்றும் நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம், மேலும் ராஜஸ்தானில் உள்ள ஷாகர்ஹ் வனப்பகுதி ஆகிய மூன்று வன பகுதியில் சிறுத்தைகளுக்கு மறுபடி மறுவாழ்வு அளிக்க திட்டம் தீட்டியுள்ளனர். Project Cheeta என்ற திட்டத்தின் மூலமாக இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகளை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

 இந்தியாவில் இருந்த சிறுத்தைகள் வேட்டைகளின் மூலமாக முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்ட நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் இருந்து சிறுத்தைகளை இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட வனப் பகுதிகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு சிறுத்தைகளின் வாழ்வதற்க்கான தகுந்த வனம் எதுவாக இருக்கும் என்பதை கண்டறிந்து இந்த மூன்றுவனங்கள் தேர்ந்தெடுத்துள்ளன. சிறுத்தைகள் தனி காட்டு ராஜா; இவை தனியே வாழ்பவை.

எனவே போதுமான இட வசதிகள் வேண்டும். மேலும் மான் முயல் போன்ற சிறுத்தைகளின் இரைஉணவு எங்கு சரியானபடி கிடைக்கும் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வனப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இந்த மூன்றுவனப்பகுதிகளும் சிறுத்தைகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்க்கை சமநிலையை உறுதி செய்வதில் ஊன் உண்ணிகளுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எனவே சிறுத்தைகளை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவருவது மிகவும் வரவேற்க்க தக்க செய்தி. இனி மறுபடி இந்திய காடுகளில் சிறுத்தை சீறும் சப்தம் கேட்கும்.

So, what do you think ?