தேசிய அறிவியல் தின விழா போட்டிகள் 2017

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

contest புதுவை அறிவியல் இயக்கம், புதுவை அரசின் அறிவியல் தொழில் நுட்ப மாமன்றமும் இணைந்து ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தைக் கொண்டாடி வருவது தாங்கள் அறிந்ததே, இந்த ஆண்டை 2017 உலக சுற்றுலா ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது. அதேபோல்  சீர்மிகு திறனாளிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப பங்களிப்புகள்”. (NSD Theme: Science & Technology for Specially – abled Persons)” என்ற கருப்பொருளை இந்திய அரசு இந்த ஆண்டுக்கான அறிவியல் தின கருப்பொருளாக அறிவித்துள்ளது. இந்த தலைப்புகளை உள்ளடக்கி புதுச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய பகுதிகளில் அறிவியல் இயக்கம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

புதுச்சேரி, கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள் அழகிய நகரம். இது புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளை தன்னகத்தே இணைந்த பகுதி. சிறிய இடமாயினும் நல்ல பல இடங்களைப் பெற்றுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநில பயணிகள்  சுற்றுலாவிற்கு தேர்வு செய்கின்ற முதன்மையான இடங்களுள் புதுவையும் திகழ்கிறது. அரிக்கன்மேடு மற்றும் சதுர்வேதி மங்களம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும், அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா, நூலகம், அழகிய கடற்கரை, படகு குழாம், சமூகக் காடுகள், சுந்தரவனக் காடுகள், நெற்களஞ்சியங்கள், பல முக்கிய வார சந்தைகள், பல சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றவைகளையும் இணைத்து சுற்றுலா பயணிகளை கவந்திழுக்கும் புதுவை.

நீடித்த நிலையான சுற்றுலா, பருவநிலைக்கு ஏற்ற தகவமைப்பு பெற வல்லதும் பல்லுயிர்ப்பன்மத்தைப் பேணிக் காப்பதிலும், வேலை வாய்ப்பிலும் புதுச்சேரியின் வளர்ச்சியில்  முக்கிய பங்கு சுற்றுலா என்பதை கருத்தில் கொண்டு நாம் இந்த சர்வதேச சுற்றுலா ஆண்டை பரவலாக எல்லாதரப்பு மக்களிடமும் எடுத்து செல்லவேண்டும்.

அந்த அடிப்படையில் மேற்கண்ட கருப்பொருள்களை புதுச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கீழ்க்கண்ட போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே இந்நிகழ்ச்சிகளில் உங்கள் பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் பங்கேற்க செய்ய வேண்டுமென்று  அன்புடன்  கேட்டுக்கொள்கிறோம்.

போட்டிகள் கீழ்கண்ட தலைப்புகளை அடிப்படையாக கொண்டு இருக்கவேண்டும்.

 • புதுச்சேரியின் நிலவளம், சிறப்பு வாய்ந்த வரலாற்று இடங்கள், சின்னங்கள், சிற்பங்கள், மனதை கவரும் இயற்கைப் பகுதிகள் (விவசாயப் பகுதி, ஆறு, ஏரி, குளம், பூங்கா, கோயில்காடு…, போன்ற)
 • பாரம்பரிய தொழில் சார்ந்த பகுதிகள் ( நெசவு, மண்பானை, கைவினை…, போன்ற)
 • புதுச்சேரியின் பாரம்பரிய விளையாட்டுகள் ( சிலம்பம், பல்லாங்குழி, பச்சைகுதிர,.. போன்ற)
 • உழைப்பாளிகள்(விவசாயிகள், கட்டுமான ஊழியர்கள், பெண்கள் உழைப்பாளிகள்.., போன்ற)
 • புதுச்சேரி மாநில அரசின் சின்னங்கள் ( மரம், மலர், பறவை, விலங்கு.., போன்ற)
 • பெரிய உணவகங்கள், கடற்கரை அழகோவியங்கள்………….
பிரிவு போட்டிகள் கருப்பொருள்
6,7,8 வகுப்புகள் ஓவியப்போட்டி உலக சுற்றுலா ஆண்டு 2017
9 முதல் 12 வகுப்புவரை கட்டுரைப் போட்டி உலக சுற்றுலா ஆண்டு 2017
கல்லூரிமாணவர்கள் புகைப்பட போட்டி உலக சுற்றுலா ஆண்டு 2017
பொது மக்கள் கட்டுரைப் போட்டி புகைப்பட போட்டி உலக சுற்றுலா ஆண்டு 2017

 ஓவியப்போட்டிக்கான விதிமுறைகள்

 • A ‘4’சார்ட்டில் வரையப்பட வேண்டும். ஒருவர் ஒரு ஓவியம் மட்டுமே அனுப்ப  வேண்டும்.
 • ஓவியம்பள்ளி பொறுப்பாளர்கள் முன்பு வரைந்து அனுப்பப்பட வேண்டும்.

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள்

 • கட்டுரைப்போட்டி5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்
 • A ‘4’  வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். டைப் செய்யாமல்         தெளிவான கையெழுத்தில்  எழுதி அனுப்பவேண்டும்.

பொது மக்களுக்கான  கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள்

 • 5 பக்கங்களுக்குமிகாமல் இருக்க வேண்டும்.
 • தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்
 • A‘4’  வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். டைப் செய்யாமல்         தெளிவான கையெழுத்தில்  எழுதி அனுப்பவேண்டும்.

Photographyபுகைப்பட போட்டிக்கான விதிமுறைகள்

 • ஒருவர் 3 படத்திற்குமேல் அனுப்ப கூடாது.
 • புகைப்படத்திற்கு தக்கவாறு தலைப்பு இருக்கவேண்டும் அதிகபட்சமாக 5 வரிகள் மட்டுமே விளக்கம்  இருக்கவேண்டும்.
 • A‘4’  அளவு உள்ள புகைப்படமாக பிரின்ட் செய்து கட்டாயம் கொடுக்கவேண்டும். அதன் உண்மை நகலை இமெயிலில் (cerdpsf@gmail.com) அனுப்பவேண்டும்.

குறிப்பு

 • படைப்புக்களை வரும் 2017 மார்ச் 25ம் தேதிக்குள்  கீழ்க்கண்ட  முகவரிக்கு  நேரடியாகவோ தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
 • ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும்,  பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.
 • உங்கள் புகைப்படம், பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் தனித்தாளில் இணைத்து அணுப்பவேண்டும்.
 • கட்டுரை தமிழில் மட்டுமே எழுதி அனுப்பவேண்டும்.
 • சிறந்த படைப்புக்கள் புதுவை தமிழ்நாடு அறிவியல்  இயக்கங்கள் இணைந்து நடத்தும்  இதழ்களான  துளிர்,  ஜந்தர் மந்தர்,  அறிவியல் முரசு  ஆகியவற்றில்  வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு 0413 2290733, 9894926925, 9443385824 என்ற  எண்ணுக்கு  அலுவலக  நேரத்தில்  தொடர்பு  கொள்ளவும்.

  அனுப்ப வேண்டிய முகவரி :-

புதுவை அறிவியல் இயக்கம்

10, இரண்டாவது தெரு,

பெருமாள் ராஜா தோட்டம் ரெட்டியார்பாளையம்

புதுச்சேரி  – 605010

அன்புடன்

(A.ஹேமாவதி)

பொதுச்செயலாளர்

புதுவை அறிவியல் இயக்கம்.

So, what do you think ?