லிமா COP20 : காலநிலை மாற்றம் ஐ.நா.வின் உலக உச்சி மாநாடு

BY IN Article, News- செய்திகள், PSF NO COMMENTS YET , , , , , , ,

lima_climate_change_conference-bannerபெரு நாட்டின் தலைநகர் லிமாவில் டிசம்பர் 1 தேதி முதல் 12ந் தேதிவரை  காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் உலக உச்சி மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் 190 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

 

இந்தியாவின் சார்பில் இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள்.

1. காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் தகவமைத்து கொள்வது குறித்தநடவடிக்கையை மட்டுமே பின்பற்றும். மற்றபடி வளரும் நாடுகளின் உரிமையைவிட்டுக்கொடுக்காது.

2.காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் திட்டங்களுக்கு இதற்கனவே உருவாக்கப்பட்டுள்ள பசுமை காலநிலை மாற்ற நிதியிலிருந்து நிதி உதவியும் தொழில் நுட்பத்தையும் செல்வந்த நாடுகள் அளிக்க வேண்டும்.

3. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளின் தகவமைத்துக் கொள்ளும் திட்டங்களுக்கு விருப்பப்பூர்வமாக தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டபங்கு என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வளரும் நாடுகள் நிதி உதவி அளிக்க வேண்டும்.

4. காலநிலை மாற்றத்திற்கேற்ப தகவமைத்துக் கொள்ளுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிதிஅமைப்பில் இந்தியா தனது தீர்மானகரமான பங்களிப்பைச் செலுத்தும்.

காலநிலை மாற்றம் என்பது என்ன

 சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டு மீதி வெப்பத்தை வெளியேற்றாமல் பூமிக்குள்ளேயே கிரகித்துக் கொள்வதால் பூமி சூடாகி, அதனால் கால நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். வெப்பம் வெளியேற்றப்படாமல் கிரகித்துக் கொள்வதற்கு காரணம் இந்த பூமிப் பரப்பில் அதிகமாக வெளியிடப்படும் கரியமில வாயுக்களும் மற்ற பசுமை இல்ல வாயுக்களும்தான்.

அமைப்பின் தொடக்கம்

பூமி சூடாவதும் காலநிலை மாற்றங்களும் இயற்கையாகவே நடைபெறுகிறது என்று கூறிவந்தன. காலநிலை மாற்றம் மனிதச் செயல்பாடுகளால்தான் உருவானது என்பதை அறிவியல்பூர்வமான அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் ‘காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு அரசுக்குழு’ நிறுவியது.

பூமியானது இயல்பு நிலையை விட கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அடைந்து விட்டால், தடுத்து நிறுத்த முடியாத அளவில் மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். இதனை உணர்ந்த சர்வதேச சமூகம், ஐ.நா. சபையின் மூலமாக ஒரு புதியஅமைப்பினை உருவாக்கி, வரவிருக்கின்ற பேரழிவு அபாயத்தை தொடர்ந்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உணர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் பன்னாட்டு எண்ணெய் கம்பெனிகளும் ஏகாதிபத்திய நாடுகளும், குறிப்பாக அமெரிக்க உள்ளீட்ட நாடுகள் இதைக் கண்டு கொள்ளாமல் மறுத்தே வந்துள்ளன.

1994ஆம் முறையாக ஐ.நா. காலநிலை மாற்றம் பற்றிய பணித்திட்டப் பேரவையின் (யு.என்.எப்.சி.சி.சி.)  ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை (United Nations Framework Convention on Climate Change (UNFCCC) என்ற அமைப்பு உருவாக்கபட்டு இதுவரை 19 உடன்படிக்கை கூட்டம் நடத்தபட்டு தற்போது 20 உடன்படிக்கை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் இதில் முக்கியமாக, வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் அதிகமாக கரியமில வாயுவையும் பசுமை இல்ல வாயுக்களையும் வெளியிடுகின்றன. ஏனெனில் இந்நாடுகளில்தான் தொல்படிம எரிபொருட்களான பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், நாப்தா உள்ளிட்ட அனைத்து எரிபொருள்களையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளும் எண்ணற்ற கட்டமைப்பு வசதிகளும் அதிகமாக உள்ளன. இவற்றை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயு மற்றும் பசுமை இல்ல வாயுக்களும்தான் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை வெளியே செல்ல விடாமல் கிரகித்து கொண்டு பூமி சூடாவதற்கு காரணமாக உள்ளன என்பதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டனர்.

காலநிலை குறித்து  வெளியிடப்பட்ட  முக்கிய  அறிக்கைகள்

பூமியின் வெப்பநிலை 1950க்குப் பின் 74 சதவீதம் உயர்ந்ததற்கும் அதன் காரணமாக பருவநிலைச் சீர்கேடுகளும் மனித நடவடிக்கைகளினால் வெளியிடப்பட்ட CO2 என்பது உண்மை என்பது அங்கு நிரூபிக்கப்பட்டது. மேலும் கடலின் அமிலத்தன்மை 20 மில்லி
யன் வருடங்கள் இல்லாத அளவு அதிகரித்து உள்ளது என்றும் அறிவியலாளர்கள் கவலை தெரிவித்தனர். 50 சதவீதம் ஆர்க்டிக் பிரதேசம் 2050ல் கரைந்துவிடும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

புவி  வெப்பமடைந்து  வருவதற்கு லாபவெறி கொண்ட  பன்னாட்டு நிறுவனங்களே  முக்கிய  காரணம்  என்று இதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியின் வெப்பம்  ஆபத்தை  உண்டாக்கும் அளவில்  அதிகரிப்பதை தடுக்க இந்த   நூற்றாண்டில் உலகத்துக்கு தேவையான மின்சாரம்  கரிம   வெளியேற்றம் இல்லாத  உற்பத்தி முறைகளிலிருந்து பெற   வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை சமாளிக்க    பெரும்பான்மை நாடுகள் தயாராகவே இல்லை என இந்த   அறிக்கை வெளியிடப்பட்டபோது ஐநா பொதுச்செயலாளர் பான்   கீ மூன் தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தை   தடுப்பதற்கான புதிய உலகளாவிய  ஒப்பந்தம் ஒன்றை சர்வதேச   நாடுகள் விவாதித்து  வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்த ஒப்பந்தம்    நிறைவேற்றப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான   வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு,   காடழிப்பு, போன்ற மாந்தச் செயற்பாடுகளே காரணமென   தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான குழு (IPCC)   முடிவு செய்துள்ளது. வெப்பநிலை மாற்றம் உலகம் முழுவதும்  ஒரே அளவில் நடைபெறவில்லை.

சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic   energy agency) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2030ம்  ஆண்டு  கார்பன்-டை-ஆக்ஸைடு உலகில் அதிகரிக்கும்  என்கிறது. 2050ம்  ஆண்டுக்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை  பசுமையில்ல  வாயுக்களின் வெளியீட்டை அதிகரிக்க  வேண்டும், இல்லையெனில் அதிக மோசமான விளைவுகளை  உலகம்  சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிவித்துள்ளது.

மாற்று எரிபொருட்கள் இன்னும் கண்டுபிடித்து அவற்றை வளர்த்தெடுக்கும் பொருளாதார நிலை இல்லை. அமெரிக்காவின் பிடிவாதம் இந்த நிலையில் ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றத்திற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அதே சமயத்தில் வளரும் நாடுகளின் நிலையை வேறுபடுத்திக் காண வேண்டும். அதற்காக அந்த நாடுகளுக்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் முடிவானது. ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை அனைத்து நாடுகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி ஒப்பந்தத்தினை ஏற்க மறுத்து விட்டது.

அமெ. – சீனா உடன்பாடு இந்தப் பின்னணியில் உலகம் முழுவதும் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் இயக்கங்களும் மக்கள் இயக்கங்களும் போராடியதன் விளைவாகவும் அமெரிக்கா உள்ளிட்டு பல நாடுகளில் காலநிலை மாற்றங்களின் விளைவாக தொடர்ந்து புயல், சூறாவளி, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான இயற்கைச்சீற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக – அமெரிக்கா தனது நிலையிலிருந்து இறங்கி வந்தது.

சமீபத்தில் அமெரிக்காவும் சீனாவும் காலநிலை மாற்றம் குறித்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி வெளியிடும் மாசு வாயுக்களை அமெரிக்கா 2025ற்குள் 28 விழுக்காடு குறைத்து கொள்வது என்றும் சீனம் 2030 ற்குள் அதே அளவு குறைத்து கொள்வது என்றும் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், தற்போது 12 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவின் உடன்பாடு இதற்கு உத்வேகம் அளித்துள்ளது.

So, what do you think ?