ஜூன் 30 விண்கல் தினம்

BY IN Article 1 COMMENT , , , ,

 

meteorshowerஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் நாள் தேசிய விண்கல் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. மேலும் இதுவே, தேசிய விண்கல் தினம்(National Meteor Day) என்றும் கூறப்படுகிறது.அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்படும் என்றும் நம்புகிறோம்.நாம் வானை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன.

1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர் விட்டமுள்ள ஒரு விண்கல், 1000 சதுர கி.மீ  பரப்பளவுள்ள  சைபீரியன் காட்டை அழித்தது. அதுவும் இந்த கல் பூமியில் மோதவில்லை. மாறாக, அது பூமியை நோக்கி பயணித்த வழியில் பூமியிலிருந்து 5 கி.மீ உயரத்தில் சைபீரியன் காட்டின் மேல் வெடித்தது. இதன் விளைவாக 30 கி.மீ  சதுர காடுகள் அழிந்தன.  எனவே தான் ஜூன் 30 உலக விண்கற்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 வானம்  வானம் பார் என்று  எல்லோருக்கும் வானத்தைப் பார்ப்பது என்றால் படு குஷிதான். யாருக்கு வானம் பிடிக்காது சொல்லுங்களேன். ஆனால் வானத்தில் என்னென்ன இருக்கின்றன என்று பட்டியல் போட்டு  பார்த்தீர்களா? ம் ம் என்னென்ன உள்ளன. பகலில் சூரியன் மட்டுமே  என்ற தனிக்காட்டு ராஜாதான்.  நிலா  மற்றும் விண்மீன்கள் எல்லாம் உலா வந்து  ஜமாபந்தி நடத்துவது எல்லாம்  .இரவில்தான்.பொதுவாக இரவில தான் எந்த வான்பொருட்களையும் நம்மால் பார்க்க முடியும். இரவில்தான் நிலா தவிர மற்ற கோள்களும் தங்களைக் காண்பித்துக் கொள்கின்றன.பகலில் பகாசுர வெளிச்சம் உள்ள ராஜாங்கத்தில், சூரியனைத் தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை.

அதெல்லாம் சரி நண்பர்களே,,நிலவில்லா வானை இரவில் பார்த்து ரசித்த அனுபவம் உண்டா. அப்போது சில சமயம் வானில் வேகமாக விரைந்து  செல்லும் பளிச் சென்ற வெளிச்சக் கீற்றுகளைப் பார்த்திருப்பீர்களே . அவைதான்  நம் மக்கள் “எரிநட்சத்திரம்” என்று அழைக்கும் விண்கல் (meteor ). அவற்றைப்  பார்த்தால் நமக்கு ஞாபக மறதி ஏற்படும் என்றெல்லாம், மிகப்பெரிய மூடநம்பிக்கையை வேறு நாம் மக்களிடையே அவிழ்த்துவிட்டுக்கொண்டும் இருக்கிறோம். இது உண்மையல்ல. இவைகள் எல்லாம், நமது சூரிய குடும்பத்தில் கோள்கள் உருவாகும்போது அவைகளால் விடுபட்டுப்போன மிச்ச சொச்சங்கள்தான். இவைகளின்  வேகம் மணிக்கு எத்தனை கி.மீ இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சுமாராக நொடிக்கு 11 கி.மீ.லிருந்து 70 கி.மீ வரை கூட இருக்கும்.(11 km/sec (25,000 mph), to 72 km/sec (160,000 mph)

இதில் அஸ்டிராய்டுகள்என்றால் என்ன ?  அஸ்டிராய்டுகளும் (astroids),  விண்கற்களும் (meteors) ஒன்றா?  சூரிய மண்டலத்தில் அஸ்டிராய்டுகள் என்ற குட்டி குட்டி கோள்கள் உலா வருகின்ற்ன. அவை கொஞ்சம் பெரிதாக இருந்தால் அதற்கு planetoids என்று பெயர். இவை தனி வகை. செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கும் இடையே அதிகமாக காணப்படுகின்ற்ன.அங்கு லட்சோப லட்சம் அஸ்டிராய்டுகள் உள்ளன.இவை சூரிய மண்டலம் உருவானபோது விடுபட்டுப்போனவைகள்தான்.  அஸ்டிராய்ட் மண்டலம்(asteroid belt ) உள்ளது. இவை  ராணுவ வீரர்கள் போல அணிவகுத்துச் செல்லும் அழகே அழகு. இவை அனைத்தும் ஓர் ஒழுங்குடன் அணிவகுத்துச் செல்பவையாக சூரியனைச் சுற்றுகின்றன.

தவிர  அஸ்டிராய்ட் மண்டலத்திலிருந்து பல ஆயிரம் அஸ்டிராய்டுகள் தனியே  கிளம்பி பூமிக்கு அருகே வந்து செல்கின்றன. இவ்விதமான அஸ்டிராய்டுகள் மீது தான் குறிப்பாக கவனம் செலுத்தப்படும்.விண்வெளித் துறையில் இன்று எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சந்திரனுக்குச் சென்று வருவதை விட அஸ்டிராய்டுக்குச் சென்று வருவது சுலபமானதே. சந்திரனுக்கும் அத்துடன் கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. ஆகவே அவற்றில் போய் இறங்கினால் ஈர்ப்பு சக்தி காரணமாக அங்கிருந்து எளிதில் உயரே கிளம்ப முடியாது. ராக்கெட் உயரே கிளம்புவதற்கு நிறைய எரிபொருள் தேவைப்படும். அவற்றுடன் ஒப்பிட்டால் அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவதும் அங்கிருந்து கிளம்புவதும் எளிது. வடிவில் அவை சிறியவை என்பதால் அஸ்டிராய்டுகளின் ஈர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். ராக்கெட் உயரே கிளம்புவதற்கு கொஞ்சம் எரிபொருள் இருந்தாலும் போதும்.

நாஸா அனுப்பிய டான் (Dawn) என்னும் செயற்கைக்கோள் பூமியிலிருந்து சுமார் 18 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெஸ்டா என்னும் அஸ்டிராய்டை அடைந்து அதைச் சுற்றி வருகிறது.

இப்போது விண்கற்களுக்கு வருவோம்.

விண்கல் என்பது சின்ன பாறைபோன்ற உலோக பொருளாகும். இது வான்வெளியில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவை அஸ்டிராயிடுகளைவிட மிகச் சிறியவையே. இதன் அளவு என்பது ஒரு நெல் அளவிலிருந்து ஒரு மீட்டர் சைசில் உள்ள கல் போலவும் இருக்கலாம்,இவைகளின் அளவை வைத்தே, இவற்றை மைக்ரோ விண்கல்,.வான் துகள்/வான் தூசு  என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவை எல்லாம், நம்ம வால் நட்சத்திரம் என்னும் வால் மீன்கள்(comets)./ அஸ்டிராய்டுகள் விட்டுவிட்டுப் போன அல்லது உதிர்த்துவிட்டுப்போன துகள்கள். சில சமயம், சந்திரன் மற்றும் செவ்வாய் மோதலின் போது உதிர்ந்த துகள்களாகவும் கூட இருக்கலாம்.

  ஒரு விண்கல் தனது சுற்றுப்பாதையிலிருந்து நழுவி, புவியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிட்டால், அதன் தன்மையே/ வேகமே  தனிதான்.அது பூமியின் வளிமண்டலம் ஈர்ப்புக்குள் வந்தாச்சு என்றால்,அதன் கதையே வேறுதான்.  அதன் நகர்வு வேகம்,நொடிக்கு 20 கி.மீ லிருந்து அதிகரிக்கும்.சுமாராக மணிக்கு 72,000 கி.மீ வேகம் வரை பறந்து போகும். இந்த வேகத்தில் இது வளிமண்டலக் காற்றுடன் உரசுவதால், ஏரோ டைனமிக் வெப்பம் ஏற்பட்டு எரிந்து போகும் வாய்ப்பு அதிகம். அத்துடன் இது ஒளியையும் கக்கிக்கொண்டே எரிந்து கரைந்து காற்றில்  கலந்துவிடும்.அப்படியே போகிற போக்கில் அந்த ஒளி ஒரு கீற்றாகத்  தெரியும்.விண்கற்களின் இந்த தன்மைக்குத்தான் எரியும் விண்மீன் என்றும் எரிநட்சத்திரம் என்று  அழைக்கின்றனர்.  அப்படிப்பட்ட ஒளித்துகள்கள்சில நொடியில்,/நிமிட நேரம்  தொடர்ந்து ஒரே இடத்திலிருந்து கொட்டுவது போல தெரிந்தால்,,அந்த  ஒளி , அதுவும் வண்ண வண்ண மயமான ஒளி த்துகள்கள் கொட்டுவது போலவே  தெரியும் . இதனை விண்கற்கள் பொழிவு என்றே அழைக்கின்றனர்.

   ஒவ்வொரு நாளும், பூமியின் வளிமண்டலத்துக்குள் கோடிக்கணக்கான விண்கற்கள் பயணித்து  கொண்டே இருக்கின்றன. விண்கற்கள் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது,அது காற்றில் வேகமாக உரசி, எரிந்து  காற்றாகி விடுகிறது.அப்போது அது வந்த வழியை வெளிச்சமாக விட்டுச் செல்கிறது. ஒரே பகுதிக்குள் ஏராளமான  விண்கற்கள் எரிந்து தொடர்ந்து அப்பகுதியை வெளிச்சச் புள்ளிகளை விதைத்து வைப்பதை காட்சியளிப்பதை விண்கற்கள் பொழிவு என அழைக்கிறோம்.

விண்கற்கள் கூட்டமாக ஒரு  இடத்திலிருந்து தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருப்பதை நாம் விண்கற்கள் பொழிவு(meteor shower) என்கிறோம். இப்படி எரிந்து விழும் பொருளை, இந்த எரி நட்சத்திரம் என்ற விண்கல் வீழ்ச்சியை மனித இனம்  வானைப்   பார்க்கத் துவங்கியதிலிருந்தே  பார்த்திருகிறது. ஆனாலும்  கூட, அவற்றைப் பற்றிய பதிவு என்பது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்திருக்கிறது. அதாவது ஒரு கவிஞர் அதனைப் பார்த்து, ரசித்து , பதிவு செய்தும், எழுதியும் இருக்கிறார்.  அவரின் பெயர் கவிஞர்.சாமுவேல் டெய்லர் கொலெரிட்ஜ்..இவர் தனது பிரபலமான வரிகளில்  அவற்றைப் பதிவு செய்துள்ளார்.அவர் லியோனிட் விண்கற்கள் பொழிவைப் பார்த்துவிட்டு 1797ல் செய்த பதிவுதான் இது.

Samuel Taylor Coleridge’s famous lines from The Rime of the Ancient Mariner:

The upper air burst into life!

And a hundred fire-flags sheen,
To and fro they were hurried about!
And to and fro, and in and out,
The wan stars danced between

And the coming wind did roar more loud,
And the sails did sigh like sedge;
And the rain poured down from one black cloud;

ஆண்ட்ரு எலிகாட் டக்ளஸ் என்ற துவக்க கால வானவியலாளர்  அமெரிக்காவைச் சேர்ந்த கப்பலிலிருந்து லியோனிட் விண்கல் பொழிவை 1799ல், பார்த்துவிட்டு, அதனைப் பற்றி    பதிவு செய்துள்ளார்.

விண்கற்கள் பொழிவு என்பது இரவின் வானில் நிகழும் ஓர் அற்புத வானியல் நிகழ்வு. இவற்றைக் காண  கண் கோடி வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.  ஒரு முறை   பொழிவைப் பார்த்தவர்கள் மீண்டும் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது. விண்கற்கள் பொழிவின் வண்ணங்களும் அதன் அழகும் நம்மை அதனை நோக்கி ஈர்க்கும். அது வானின் ஒரு மைய புள்ளியில் துவங்கி, அதிலிருந்து பலமுனைகளுக்கும் தெறித்து சிதறி ஓடும். இவை, வானில் வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற பொருட்கள் அல்லது அஸ்டிராயிடுகள் விட்டுச் சென்ற் பொருட்களில் வான் துகள்கள். இவை சூரிய மண்டல சுற்று  வேகத்தால்,அல்லது எப்படியோ தடம்  மாறி, புவியில் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டால், அவை பூமியின் ஈர்ப்பு விசையால், வேகமாக காற்றுடன் உரசி கீழே இறங்கும். அப்போது உரசலில் ஏற்படும் வெப்பத்தால் பல

கோடிக்கணக்கானவை , பூமியை வந்தடையுமுன் எரிந்து சாம்பலாகி விடுகின்றன.சுமாராக ஒவ்வொரு ஆண்டும், இந்த பூமியில் 15,000 டன்  விண்கற்கள்/மைக்ரோ விண்கற்கள் , வான் தூசுகள், பூமி மேலே பலப்பல வடிவங்களில் கொட்டிக்கொண்டே தான் இருக்கின்றன

அதுமட்டுமல்ல. விண்கற்கள் பொழிவின்போது பலப்பல வண்ணங்களில் தெரியும். அவற்றின் வண்ணங்களுக்கான காரணம் அந்த பாறைத் துகள்களிலுள்ள தனிமங்களின் வேதிப்பொருட்களே .. எரிந்து அதன் வண்ணங்களைக் காட்டுகின்றன. அதுமட்டுமல்ல, அது வளிமண்டலக் காற்றை எவ்வளவு வேகத்தில் மோதி,  எரிந்து   செல்கிறது என்பதை பொறுத்தும் கூடவே. ஆரஞ்சு –மஞ்சள் நிறம், விண்கல்லிலுள்ள சோடியம்தான் காரணி.முழு மஞ்சள் நிற விண்கல் பொழிவு அதிலுள்ள இரும்பால் ஏற்படும். விண்கல் பொழிவின் நிறம்நீலப்பச்சை எனில் அதில் மக்னீஷியம்/தாமிரம் , இருப்பதால் உண்டாகிறது. வயலட் நிறம் கால்சியம் தனிமத்தால் ஏற்படுகிறது.  சிவப்பு நிறம் வளிமண்டலத்தின் இரும்பு/ நைட்டிரஜன் மற்றும் ஆக்சிஜனால் உருவாகிறது.

விண்கற்கள் விண்ணிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் வீழுமுன் அதற்கு விண்வீழ் (meteoroid ) என்று பெயர். எரிந்து விழும் விண்கல் எரிநட்சத்திரம் என்று அழைக்கபப்டுகிறது. இது புவியின் வளிமண்டலத்தில் எரிந்து இல்லாமலே போய்விடுகிறது. ஒரு சில விண்கற்கள் எரிதலையும் தாண்டி,அரிதாக, சிலசமயம் பூமியை வந்து சேருவதும் உண்டு. அது ஒரு சில மி.மீ லிருந்து பல மீட்டர்கள் பெரியதாகவும் இருப்பதுண்டு. பூமித்தரையை எட்டிப் பிடித்த விண்கல்லுக்கு விண்கற்கள் என்றே பெயர். குட்டியூண்டாக உள்ள சில மி.மீ சைஸ் விண்கல்லுக்கு வான் தூசு என்று அழைக்கின்றனர்.

தரையில் வீழ்ந்த  விண்கற்களை 3 வகையாகப் பிரிக்கின்றனர். அவை இரும்பு விண்கற்கள், கல் விண்கற்கள் மற்றும் கல்லும் இரும்பும் இணைந்த விண்கற்கள் . பெரும்பாலும் விண்கற்கள் இரும்பு வகையைச் சேர்ந்தவையே.இதில் இரும்பும் நிக்கலும் இருக்கும். இவை : 90-95%. கல்லாலான விண்கற்கள் காந்த  தன்மை  உள்ளவையாகவும் கோள்களின் பாறைத்  தன்மையும் கொண்டிருக்கும்.  இவற்றில் சிலவற்றில் வண்ண வண்ண தனிமங்கள் இருக்கும்.இவை நம் சூரியகுடும்பம் உருவாவதற்கு முன் வந்தவை ஆகும்.  இவற்றிற்கு, காண்டிரைட்ஸ் ( “chondrites) என்று பெயர். இவைதான் மிகப் பழமையான  விண்கற்களாகும்.கல்லும் இரும்பும் உள்ள விண்கற்கள் Pallasites என்பபடுகிறது. இவற்றில் ஓலிவைன் படிகங்கள் ( olivine crystals) பொதிந்து காணப்படுகின்றன. சமயத்தில் இவை தூய்மையாய் இருப்பின் ,அது மரகதப் பச்சை வண்ணத்தில் அழகாக மிளிரும்.  அப்படி ஒரு விண்கல் 18ம் நூற்றாண்டில், ரஷ்யாவில் சைபீரியாவுக்கு அருகில் கிடைத்தது.அதுமட்டுமல்ல, செவ்வாய் கோளிலிருந்து வீழ்ந்த விண்கல்லும் கூட கிடைத்திருக்கிறது.

இன்னொரு விஷயம், விண்கல் விழுந்து மிகப் பெரிய பள்ளம் ஒன்று   அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உருவாகி உள்ளது. இதன் வயது  50,000 ஆண்டுகளாகும். இந்த பள்ளத்தின் ஆழம் 200 மீ. குறுக்களவு 1.200 மீ. இது போலவே உலகில் சுமாராக 120 விண்கற்கள் உருவாக்கிய விண்கல் பள்ளங்கள் உள்ளன. விண்கல் மோதலால் பூமியில் ஏற்பட்டு புழுதி புயலால்தான் டைனோசர் இனம் அழிந்தன என்ற கருதுகோள் ஒன்றும் உள்ளது. விண்கற்கள் விற்கப்படுவதும் உண்டு.

அப்போது அவை எரியும்போது, அந்த விண்கற்களிலுள்ள  தனிமங்களை பொறுத்து அவற்றின் நிறமும், வெவேறாகவே இருக்கும். எனவே நாம் விண்கற்கள் பொழிவைப் பார்க்கும்போது ஒரு வண்ண வண்ண பட்டாசுகள் /மத்தாப்புகளை வானில் சுழற்றி  வீசுவது போலவே  காடசித்தரும்.மேலும் நாம் பார்க்கும் விண்கற்கள் பொழிவு என்பது வளிமண்டலத்திலிருந்து வான் நோக்கிப் பார்ப்பது தான். எனவே நாம் விண்கற்கள் பொழிவைப் பார்க்கும்போது, வானும் அதன்  பின்னணியில் விண்மீன் படலங்களும் அற்புதமாய் தெரியும்.

எந்த விண்மீன் படலத்துக்கு முன்பாக விண்கற்கள் பொழிவு தெரிகிறதோ, அதனை அந்த விண்மீன்  படல விண்மீன் பொழிவு என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் எந்த விண்கல் பொழிவையும் விடியல் வானில்தான் பார்க்க வேண்டும். அப்போதுதான் வானில் மேகங்களும் குறைவாக (அதாவது 2-4 மணி வரை) இருக்கும்.  இப்போது சமீபத்தில் வரக்கூடிய விண்கற்கள் பொழிவு என்பது ஜூலை 28-29 நிகழவுள்ள டெல்ட்டா அக்குவாரிட் விண்கற்கள் பொழிவு ஆகும். இதனை ஆகஸ்ட் முதல் வாரம் வரை பார்க்கலாம். (The Delta Aquariids:Active from July 21st to August 23rd) அடுத்து வரக்கூடிய விண்கல் பொழிவு என்பது மிகவும் பிரபலமான பொழிவு ஆகஸ்ட் 11-12 நிகழவுள்ள பெர்சியாயது விண்கல் பொழிவு  அப்புறம் அக்டோபரில் 7 ம் நாள் டிராகனாய்ட் பொலிவும், 20-21 தேதிகளில் ஓரியான்  விண்மீன் தொகுதிக்கு முன்னால் பிரிந்து ஓடும் விண்கல் பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்குப் பின் நவம்பர் மாதம் மூன்று விண்கல் பொழிவுகள் நிகழ உள்ளன. அவையாவன முதலில் நவம்பர் 4-5 தேதிகளில் ரிஷப விண்மீன் தொகுதிக்கு முன் தெரியும்.அதன் பின் தீபாவளி சமயம் அதற்கு போட்டியாய்  வானில் பட்டாசு கொளுத்தும் விண்கல் பொழிவுதான் வடக்கு ரிஷப விண்கல் பொழிவு ஆகும். அதன் பின்னர் நவம்பர் 16-17 தேதிகளில் வானில் தூள் கட்டிப் பறக்கும் விண்கல் பொழிவு சிங்கம் விண்மீன் தொகுதியில் தெரியும் லியோனிட்ஸ்  விண்கல் பொழிவு ஆகும் ..ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதம் 13-14 தேதிகளில் ஜெமினி விண்மீன் தொகுதியில்  தெரியும் விண்கல்  பொழிவின் பெயர் ஜெமினி விண்கல் பொழிவு ஆகும் இதுவும் பார்க்க அற்புதமாய் இருக்கும்.

 சில சமயம், இந்த உரசல்களை எல்லாம் தாண்டி, எரியாமல் அப்படியே  பூமியில் வந்து விழுந்து பாதிப்பையும், குழிவையும் உண்டுபண்ணுவதும் உண்டே..  அவைகளுக்கு meteorite என்று பெயர். அந்தவிண் கல்லுடன், பல பல உலோகங்கள், பொருட்கள் ஒட்டிக் கொண்டு இருப்பதும் உண்டே.

கிரேக்கத்தில், விண்கல்/எரிநட்சத்திரம் பற்றிய ஒரு கதை உண்டு.நீங்கள் எரிகல் /எரிநட்சத்திரம் விழும்போது என்ன நினைக்கிறீர்களோ அது உண்மையாகவே நடந்துவிடுமாம். கிரேக்க வானவியலாளர் தாலமி, கி.பி. 127-151ல், எழுதிவைத்த குறிப்பாவது. “கடவுள், ஆர்வமிகுதியால், அவ்வப்போது வான் வெளியில் கோள்களுக்கிடையிலிருந்து பூமியை எட்டிப் பார்த்தாராம். அப்போது சில நட்சத்திரங்கள், வானிலிருந்து நழுவி கீழே விழுந்தனவாம்..அதுதான் இந்த விண்கற்கள் என்ற புராணக் கதையும் உண்டு.

வருடத்தில் 9 முறை விண்கற்கள் பொழிவு நிகழ்கிறது
(வானின் வண்ணப் பட்டாசு கொண்டாட்டம் )வானில் நடக்கிறது. இது வால்மீன்கள் விட்டுச் சென்றதூசுதான்.இவை எந்த விண்மீன் படலத்திலிருந்துதெரிகிறதோ, அந்தப் பெயரைவைத்து,அந்த விண்கற்கள் பொழிவை அழைக்கிறோம்.

ரொம்பவும், வண்ண மயமாககாட்சி தரும் விண்கல்பொழிவு ஜெமினியாய்டு விண்கல் பொழிவு.இது.இவைகளில் 65% வெண்மையாகவும்,26 % மஞ்சளாகவும்,மீதி 9 % சிவப்பு, பச்சை, நீலமாகவும் தெரியும்.இந்த விண்கல் பொழிவு,பொதுவாக டிசம்பர் 11 -14 தினங்களில் தெரியும்., டிசம்பர் 13 ம் நாள்வானத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஒரு அழகான, அமைதியான, அருமையான தருணம் ஒன்று இருக்கவே முடியாது. அதுவும் தற்செயலாக வானத்தை பார்க்கும் போது ஒரு விண்மீனோ அல்லது ஒரு எரி நட்சத்திரத்தையோ பார்த்து விட்டால் நாம் கொள்ளும் இன்பதிற்கு அளவே இல்லை.

வானின் வண்ணமத்தாப்பு, ஜெமினி படல ண்மீன்களான காஸ்டர், போலக்சிலிருந்து, கண்ணிமைக்கும் நேரத்தில்வண்ண மயமாக, பல திசைகளுக்கும்வேகமாகச் சென்று மறையும். ஜெமினி விண்மீன்கள்,ஒரையான்(வேட்டக்காரன்)விண்மீன் தொகுதியிலிருந்துவடகிழக்கில் உள்ளது.  இரவு 10 .30மணிக்குமேல்,வடகிழக்கு வானில், சுமார் 50 டிகிரிஉயரத்தில் தெரியும். ஆனால் பின்னிரவில்,சுமார் 2 மணிக்குமேல்தான் அதிகமான விண்கற்கள்கொட்டும்.நீங்கள் வானின் இந்த வேடிக்கையை,விடிகாலை வரை பார்த்து மகிழலாம் மணிக்கு 50 விண்கற்கள் எரிந்து விழும்.

Peer down at the Earth from between the spheres. When this happened stars sometimes slip through the gap, becoming visible as shooting stars. It was though that because the Gods were already looking at us, they would be more receptive to any wishes we made!

 

One Comment

So, what do you think ?