Gobal March For Science 2.0 Puducherry

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

அறிவியலுக்கான அணிவகுப்பு

march_for_science_300dpi வணக்கம், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலை நகரங்களிலும்  இந்தியாவில்  வரும் ஏப்ரல் 14-ம் தேதி, அனைத்து மாநில தலை நகரங்களிலும் ‘March for Science’ என்ற பெயரில் அறிவியலுக்கான அணிவகுப்பு நடைபெற வுள்ளது. பூமியை பாதுகாப்போம், அறிவியலுக்கு அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியை அதிகப்படுத்துக,சுற்றுச்சூழல் சீர்ழிவுகளை தடுக்க அறிவியலை பயன்படுத்துவோம் அறிவியலைக் கற்பதையும் பரப்புவதையும் அறிவியல் மனப்பான்மையை அன்றாட வாழ்வின் அங்கமாக்குவோம், அதிகரித்து வரும் மத, சாதிய வன்முறைகளை  தடுப்போம்,  கருத்துரிமை, சகிப்பின்மை, பேச்சுரிமை பாதுகாப்போம் என புதுச்சேரியில் நடத்தப்பட இருக்கும் விழிப்புணர்வு நிகழ்வாகும்.

இந்தியாவில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளில் அறிவியல் மக்களுக்கே ! அறிவியல் ஆக்கத்திற்கே!! அறிவியல் சமூக மாற்றத்திற்கே!!! என்ற வாசகங்களோடு புதுச்சேரியிலும் 2018 ஏப்ரல் 14ஆம் தேதி  சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு,  வண்ணமயமான பேரணி மற்றும் பள்ளி மாணவர்களின் நாடகம், ஹிரோசிமா நாகசாகி பாதிப்பு தின அஞ்சலி நிகழ்ச்சி ஆகியன நடைபெற உள்ளது.  பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி ஆம்பூர் சாலை, பாரதி பூங்கா,  வழியாக சென்று கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவடைய உள்ளது.

march_for_scienceஇப்பேரணியின் முக்கிய கோரிக்கைகள் புதுச்சேரி அரசுக்கான கோரிக்கைகள்

 • அறிவியல் கல்விக்கு என்று தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
 • GDPயில் 2 சதவிகிதம் நிதியை அறிவியலுக்கு ஒதுக்கவேண்டும்.
 • புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தவேண்டும்.
 • அறிவியல் பெயரில் செய்யப்படும் போலி விளம்பரங்கள், வதந்திகள் பரவுவதை தடைசெய்ய வேண்டும்.
 • மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை புதுச்சேரியில் உடனே நிறைவேற்றவேண்டும்.
 • போலி அறிவியல் பயிற்சி மையங்கள் (Mid-Brain Activation & Brain Intuition) மேலும் போலி மருத்துவ முறைகளை புதுச்சேரியில் தடைசெய்யவேண்டும்.

இந்திய அரசுக்கான கோரிக்கைகள்

 • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், 10 சதவிகிதம் கல்விக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
 • மத்திய அரசு அறிவியல் ஆதாரமற்ற, மூடநம்பிக்கைகளைப் பரப்பும் செய்திகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. அரசியலமைப்பின்  51A(H) பிரிவின்படி அறிவியல், மனிதநேயம்,  கேள்விகேட்கும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்க வேண்டும்.
 • பாடத்திட்டங்களில் அறிவியல் ஆதாரமற்ற கருத்துகளை, வரலாற்று திரிபுகளை திணிக்கக்கூடாது.
 • இந்திய அரசின் சார்பில் இயற்றப்படும் கொள்கைகள் அனைத்தும் ஆதாரம் சார்ந்த அறிவியலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
 • UGC, IIT, NIT, IISER, CSIR, DST, விஞ்ஞான் பிரச்சார் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு திட்டம் போன்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் நடத்தப்படும் அறிவியல் ஆய்வுகளுக்காண நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவேண்டும்.
 • பாதுகாப்பற்ற மென்பொருட்களை அரசு தடை செய்வதோடு, இலவச கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும். மேலும், இனைய சமத்துவ உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
 • அறிவியல் அமைதிக்காகவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அழிவிற்கு இட்டுச் செல்ல அல்ல என்பதை சர்வதேச நாடுகளும் இந்தியாவும் அணு ஆயுதம் இல்லாத உலகைப் படைக்க பாடுப்படவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக புதுச்சேரியில் உள்ள விஞ்ஞானிகள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் இந்த அறிவியலுக்கான அணிவகுப்பு நிகழ்வு குறித்து செய்தி வெளியிடுவதோடு நிகழ்ச்சிக்கு வந்து செய்தி சேகரித்து செய்தி வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

March For Science 2.0- Puduhcerry-2018

Greetings. On April 14th, 2018, all over India, in all the State Capitals and district Head quarters, a March for India is going to be held. This march is being held with the objective of saving our planet, to prevent environmental degradation, to spread science and science education, to call all people to adopt scientific temperament in their daily lives.

This march is being held with the slogan of Science for the people, science for development, science for social change” in Puducherry also on 14th of April 2018 with a colorful rally along with s science flash-mob skit by school students, candle light vigil in the memory of the lakhs and lakhs of victims of the nuclear tragic event. The rally will start at 4:30pm from the Head Post office through Ambour Salai, Bharathi Park, and finally ending at the Gandhi Statue.

marchforscience-kwYB--621x414@LiveMintThe main charter for the March for Science Puducherry Rally to the Puducherry government is:

 • Have separate and comprehensive budget allocation forScience Education, people-centric development.
 • Allocate at least 2% of GDP in budget forscience.
 • To have a focused intervention as exclusive classes in the schools and colleges for creatingscientific awareness.
 • To ban and stop all fake news, advertisements, rumors which are spread in the name ofscience. (pseudo-science)
 • To enact an Act against superstitions in Puducherry.

Charter of demands for the Government of India.

 •  To have at least 3% of GDP forscience & technology based people-centric development and at least 10% for education as part of budget allocation.
 •  The Government should not engage in propaganda which do not have ascientific base, which are superstitious. As per section 51 A(H) of the Constitution, govt should take steps to work towards scientific temper, humanity,
 • Do not impose concepts which do not have ascientific base.
 •  All policies should bescience based.
 • To increase the fund allocation forscientific programmes, in Central organisations and institutions like UGC, IITs, NITs, IISERs, CSIR institutions, DST, Vigyan Prasar etc.
 • All countries of the world and India as well should strive for usingScience for bringing in peace, improve the quality of life and should not be used for destructive purposes and to strive for a world without nuclear weapons or other weapons of mass destruction.

The above demands are put forward by the scientists, academicians, intellectuals, educationists, writers, artists, students and the general public who have taken part in the March for Science Rally to be held in Puducherry.

So, what do you think ?