நினைவாற்றலும் மூளையும்

BY IN Article NO COMMENTS YET , , , , , , ,

மனிதர்களுடைய நரம்பியல் அமைப்பின் மையமே மூளைதான். தகவல்களைச் சேகரிக்க, சேர்த்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட, செயல்பாட்டின் முடிவுகளை எதிர்காலப் பயன்பாட்டிற்கு சேமித்து வைக்க என.. சுருக்கமாகச் சொன்னால் மனிதர்கள் வாழ்வதை அர்த்தமுள்ளதாக ஆக்க உதவுவது மூளையே. பேரண்டத்திலேயே மிகச் சிக்கலான உயிருள்ள அமைப்பு எதுவெனப் பார்த்தால் அது மனித மூளையாகத்தான் இருக்க முடியும். சராசரியாக சிறிய காலிஃளவர் பூவின் அளவுள்ள இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள அதன் எடை சுமார் 1.5 கிலோகிராம். மனித உடல் அளவுள்ள ஒரு

CONTINUE READING …

ஈஸ்டிலிருந்து உயிரி டீசல்

BY IN Article NO COMMENTS YET , , , ,

உலகில் எரிபொருளுக்கான கிராக்கி ஒருபுறம் அதிகரித்துவருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் போன்ற தொல்எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் கரியமிலவாயு போன்ற பசுங்கூட வாயுக்களின் வெளி யீடு அதிகரித்து அதன் காரணமாக பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தொல்எரிபொருட்களுக்கு மாற்றாக வேறு எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கேற்ற கூட்டுப் பொருட்களை நாம் உற்பத்தி செய்தாக வேண்டும். இதில் உயிரி எரிபொருட்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. தாவர எண்ணெய்களிலிருந்து உயிரிடீசல் (biடினநைளநட) தயாரிப்பது தற்போது உலகெங்கும் நடந்துவருகிறது. உயிரிடீசல்

CONTINUE READING …

புறக்கணிப்புக்குள்ளாகும் மென்அறிவியல்கள்

BY IN Article NO COMMENTS YET , , ,

வாழ்வியல் அறிவானது சமூக விஞ்ஞானத்தையும் மானுடவியலையும் தோற்கடித்துவிட்டது. பெற்றோர்கள் கல்லூரியில் இடம்பிடிப்பதற்காக முண்டியடிக்கும் இந்த நேரத்தில் மருத்துவம், பொறியியல், மேலாண்மையியல், வெளிநாட்டுப் படிப்பு ஆகியவற்றைத் தாண்டி வேறு வாய்ப்புகள் உள்ளதா என பெற்றோர்கள் தேடும் காலமிது. பி.ஏ வரலாறு அல்லது சமூகவியல் படிப்பதால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சில பணிகளுக்கு முயன்று பார்க்கலாம் என்பது தவிர வேறு வாய்ப்புள்ளதா? ஒரு வரலாற்றாளராக சில சங்கடமான கேள்விகளைச் சந்தித்திருக்கின்றேன்: முகலாயர்களின் வீழ்ச்சி பற்றியோ 1793 குடியேற்றம் பற்றியோ படிக்க

CONTINUE READING …

அர்ப்பணிப்பு உணர்வு விஞ்ஞானிகளின் அடையாளம்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

ஒரு குறிப்பிட்ட சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டால், அதில் விஞ்ஞானிகள் தங்களது கடுமையான உழைப்பைச் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். நியூட்டனும் ஐன்ஸ்டீனும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டபோது அவர்களது எடை கணிசமாகக் குறைந்து விடுமாம். மின்சாரத் துறையில் பல கண்டுபிடிப்புகளைத் தந்த நிகோலா டெஸ்லா (1856 – 1943) ஒரு செர்பிய – அமெரிக்க விஞ்ஞானி. குழாய்மின்விளக்கு, இன்டக்ஷன் மோட்டார்,டெஸ்லா காயில் போன்ற சாதனங்களை அவர் கண்டுபிடித்தார். இருதிசை மின்னோட்டம், மும்முனை மின்சார விநியோகம் ஆகியவற்றை உருவாக்கிய வரும் டெஸ்லாதான்.

CONTINUE READING …

வரிக்குதிரைக்கு எப்படி வரிகள் வந்தன ?

BY IN Article, Question Everythink NO COMMENTS YET , , , , ,

அசப்பில்குதிரை போல இருந்தாலும் வரிக்குதிரையின் வரிகள் பிரசித்தம். குதிரை, வரிக்குதிரை, கழுதை முதலியவை ஒரே குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள்தான். வரிக்குதிரை பலவிதம் சமவெளி வரிக்குதிரை (Equus quagga) வரிக்குதிரைகளின் இனத்தில் ஒன்று. தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் புல்வெளிகளில் இது பரவலாகக் காணப்படுகிறது. தென்மேற்கு ஆப்பிரிக்காவில் மலை வரிக்குதிரை இனம் (Equus zebra) பரவலாகக் காணப்படுகிறது. பட்டுபோன்ற பளபளப்பில் வெள்ளைவெளேர் என்று இருக்கும். அடிவயிறு முதலாகக் குறுகலான வரிகள் இருக்கும். எத்தியோப்பியா, கென்யா முதலிய நாடுகளின் வறண்ட

CONTINUE READING …

 பூமியைத் துளைத்து வெளியேறுமா கல்?

BY IN Article, Question Everythink 1 COMMENT , , , , , , , ,

 அற்புத உலகில் ஆலிஸ் என்ற நாவலில் முயலின் வளைக்குள் விழுந்து பூமிக்குள் செல்வாள் ஆலிஸ். “ இப்படியே போய் பூமியின் மறுபுறத்தில் வெளிவந்துவிடுவேனா?” என வியந்துபோவாள். கலிலியோ உட்பட பல விஞ்ஞானிகள் பூமியின் ஊடே துளை போட்டு அதில் ஒரு கல்லை நழுவ விட்டால் என்ன ஆகும் என வியந்துள்ளனர். பூமியில் துளை சாதாரணமாக 100 அடி ஆழத்துக்குக் கிணறு வெட்டுவோம். அதையே 12 ஆயிரம் கி.மீ. ஆழத்துக்குக் வெட்டினால் என்ன ஆகும்? அந்தத் துளைக்குள் ஒரு

CONTINUE READING …

மின்னலுக்கு உள்ளே என்ன இருக்கிறது ?

BY IN Article NO COMMENTS YET , , , ,

தலையில் சீப்பை வைத்து தேய்த்தால் மின்னேற்றம் ஏற்பட்டு, சிறு சிறு பேப்பர் துண்டுகளையும் தூசுகளையும் கவர்ந்து இழுக்கும் அல்லவா? அதுபோலத் தான் காற்று தூசு மற்றும் நீராவி நிரம்பிய கருமேகங்களில் தூசு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மின்சாரம் தோன்றும். அதை நிலைமின்னேற்றம் என்பார்கள். மழை தரும் கருமேகத்தில் உள்ள அமளி துமளியான நிலையில் மேலும் மேலும் கூடுதல் உராய்வு மூலகூறுகளிடையே ஏற்படுவதால் மின்னேற்றம் கூடுதல் ஆகும். கருமேகத்தில் திரளும் மின்சாரம் ஒரு அளவை தாண்டியதும் திடீரென

CONTINUE READING …

உலகச் சுற்றுச்சூழல் தினம் (World Environment Day, June 5)

BY IN Article 1 COMMENT , , , ,

Today world Environment day 2015 June 5 Environment Theme. Seven Billion Dreams. One Plant. Consume With Care. உலகம் முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் (World Environment Day, June 5) கொண்டாடப்படுகிறது. கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஜூன் 5 ஆம் தேதியும் சர்வதேச சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சுழலை காக்க வேண்டியது நம் கடமை. சுற்றுச்சூழல் தினத்தின் போது

CONTINUE READING …

Science, history and mythology: Hindutva discovery of ancient India

BY IN Article NO COMMENTS YET , , , , , , , ,

A special symposium on science and technology (S&T) in ancient India as gleaned through Sanskrit texts was organized as a side event at the 102nd Indian Science Congress held in Mumbai in January 2015. The symposium itself, with an obvious Hindutva agenda, and the claims made there, generated headlines both nationally and globally as the

CONTINUE READING …

15வது அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு (AIPSN) மாநாடு

BY IN Article, News- செய்திகள் NO COMMENTS YET , , ,

இந்திய தேசமெங்கும் அறிவியலின் அற்புதத்தை பின்தங்கிய கிராமங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை மேற்கொண்டுள்ள பல்வேறு அறிவியல் அமைப்புகளும் புதுவை அறிவியல் இயக்கம் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்த அமைப்புதான் AIPSN என்றழைக்கப்படும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு. மக்களையும் அறிவியலையும் பிரித்துவைக்கக்கூடாது, இணைத்துவைக்க வேண்டுமென்பதே இந்த  அமைப்பின் நோக்கமாகும். மக்களிடையே அறிவியல் உணர்வுகளை ஊக்குவிப்பதும், அறிவியல் அறிவை பரப்புவதும் அமைப்பின் முக்கிய செயல்பாடுகளாகும். சமூக மாற்றத்திற்கான அறிவியல் என்ற தலைப்பில்  மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 21 மாநிலங்களை சேர்ந்த 38 அமைப்புகளின்  விஞ்ஞானிகள், தொழில்நுட்பர்கள்,

CONTINUE READING …