நேற்று நரேந்தர தபோல்கர் & கோவிந்த பன்சாரே இன்று எம்.எம்.கல்புர்கி நாளை நாம்

BY IN Article NO COMMENTS YET , , ,

MMKal மூத்த கன்னட எழுத்தாளர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி எம்.எம்.கல்புர்கி (M. M. Kalburgi)சுட்டுக் கொலை – புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் கண்டனத்தை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் 30.08.2015 வலதுசாரி பயங்கிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

எழுத்தாளரும் முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம். கல்புர்கி கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள யரகல் கிராமத்தில் 1938-ம் ஆண்டு பிறந்தார். கன்னடத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், 1966-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். வசன இலக்கியத்திலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கிய அவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு இவர் எழுதிய ‘மார்கா – 4′ (வழி – 4) என்ற ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இதுமட்டுமில்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பயணித்து பல அரிய கல்வெட்டுகளை கண்டறிந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் கர்நாடக வரலாறு, க‌ன்னட இலக்கியத்தின் தொன்மை, பண் பாடு குறித்த தகவல்களை ஆதா ரங்களுடன் வெளிக்கொணர்ந்தார். கல்புர்கியின் சாதனைகளை பாராட்டி ‘பம்பா, ராணா, நிருப துங்கா’ உள்ளிட்ட உயரிய‌ விருது கள் வழங்கப்பட்டன. இறுதியாக, ஹம்பியில் உள்ள கன்னட பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

M. M. Kalburgi: Malleshappa Madivalappa Kalburgi was an Indian scholar of Vachana sahitya and academic who served as the Vice-Chancellor of Kannada University in Hampi

மறைந்த ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் யு.ஆர். அனந்த மூர்த்தியின் நண்பரான கல்புர்கி தொடர்ந்து மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளைப் பேசி வந்தார். சாதியத்தின் இழிவான பாகுபாடுகளையும், மத நம்பிக்கையின் பெயரால் தொடரும் அநீதிகளையும் எதிர்த்து மனிதநேய சக்திகளோடும், சமூகநீதி இயக்கங்களோடும் தோள்சேர்ந்து நின்றவர். கர்நாடக மாநிலத்தில் மூடநம்பிக்கைகள் தடைச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியவர்.தாம் அடையாளப்படுத்தப்பட்ட சமூகத்தின் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தலைவருக்கு தெய்வீக அருள் உண்டு என்று சொல்லப்பட்டு வந்ததற்கு, அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்று கன்னட இலக்கியங்களையும் வரலாறுகளையும் சான்றுகாட்டி மெய்ப்பித்தவர். வினாயகர் ஊர்வலங்கள் திடீரெனப் புகுத்தப்பட்டதன் மதவாத அரசியலை அம்பலப்படுத்தியவர்.இத்தகைய பல்வேறு தொடர்ச்சியான கருத்து வெளிப்பாடுகளை, மாற்றுக்கருத்தின் மூலமாகவோ, சான்றுகள் அடிப்படையிலோ எதிர்கொள்ளும் நேர்மையின்றி, அவதூறு, அச்சுறுத்தல் போன்ற செயல்களில்தான் பிற்போக்கு அமைப்புகளும் குழுக்களும் ஈடுபட்டு வந்துள்ளன. ஏற்கெனவே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த நிலையில்,

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்பாட்டை, அவரே கேட்டுக்கொண்டதற்கிணங்க அரசு விலக்கிக்கொண்டதாகவும் தெரிகிறது. கருத்தியல் அடிப்படையிலேயே தற்காப்பை அவர் நாடினார், காவல்துறை மூலமாக அல்ல என்பதை இது காட்டுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பகுத்தறிவுப் பரப்புரையாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். மூடநம்பிக்கைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகக் குரல்கொடுத்த இடதுசாரி இயக்கத் தலைவர் கோவிந்த் பன்சாரே கொலைசெய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் திட்டமிட்டவர்களோ, செயல்படுத்தியவர்களோ அந்த மாநில காவல்துறையால் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

கல்பர்கி படுகொலை செய்யப்படும் வரை தான் கடைபிடித்த முற்போக்கு பகுத்தறிவு சிந்தனைகளையும் கொள்கைகளையும் தவறாது கடைபித்தவர்.நரேந்தர தபோல்கர் கோவிந்த பன்சாரே ஆகியோருக்கு அடுத்து பகுத்தறிவு கருத்து நிலைகளுக்காக படுகொலை செய்யப்பட்டிருக்கும் மூன்றாவது முக்கியமானவர் கல்பர்கி ஆவர். இந்தப் படுகொலைகள் உணர்த்துவது நேற்று நரேந்தர தபோல்கர் & கோவிந்த பன்சாரே இன்று எம்.எம்.கல்புர்கி நாளை நாம் என்பதைத்தான்.

So, what do you think ?