அலெக்சாண்டர் கிரகாம்பெல் Alexander Graham Bell

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , ,

கிரகாம்பெல்

அலெக்சாண்டர் கிரகாம்பெல் (மார்ச் 3, 1847 – ஆகஸ்ட்2, 1922) – பிரிட்டனைச் சேர்ந்த இவர் ஓர் ஆசிரியர். தொலைபேசியை உருவாக்கியவர்.

தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார்.

கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப் பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலி உணர்வதற்கான சாதனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். காது கேட்கும் திறனற்றவர்களை செயற்கைக் காதினால் கேட்க வைக்க முடியுமா என்ற உந்துதல் ஏற்பட பிணக்கிடங்கிலிருந்து காதினை அறுத்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

தனது உதவிக்காக தாமஸ் வாட்சன் என்பவரை வைத்திருந்தார். போஸ்டன் நகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் கம்பி மூலம் ஒலியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

1874ஆம் ஆண்டு கிரகாம்பெல் மாடியில் ஒரு அறையிலும் வாட்சன் கீழே ஒரு அறையிலும் அமர்ந்தனர். இயந்திரம் முன்பிருந்து சில மாற்றங்களைச் செய்தார் பெல். எதிர்பார்த்தபடி இயந்திரம் வேலை செய்யவில்லை. எனவே, வெறுப்பில் கோபத்தில் எழுந்தார். அருகிலிருந்த அமிலக் குடுவை கீழே சாய்ந்து அவரது உடையில் கொட்டியது. உடனே, உதவிக்கு வரும்படி வாட்சனை உரக்கக் கத்தி அழைத்தார்.

பெல் அழைத்தது கீழே அறையிலிருந்த வாட்சனுக்குக் கேட்டது. காரணம், டிரான்மிஷன் என்னும் இயந்திரத்தின் முன் நின்று பெல் கத்தினார். இவ்வளவு விரைவில் ஆராய்ச்சியின் பயன் கிடைத்ததை எண்ணி வாட்சனும் பெல்லும் மகிழ்ந்தனர்.

மக்களிடம் தங்கள் கண்டுபிடிப்பை எடுத்துக்கூறியபோது யாரும் நம்பவில்லை. பின்பு பிலடெல்பியாவில் ஆய்வு செய்து காட்டினர். விக்டோரியா மகாராணியார் முன்பு செயல்படுத்திக் காட்டினர். பலர் தொலைபேசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே, பேடண்ட் உரிமைக்காக பெல் போராட வேண்டியிருந்தது. பல ஆராய்ச்சிகளுக்குப்பின் தொலைப்பேசியை அறிமுகப்படுத்தினார். அப்போது தொலைப்பேசி வசதி வேண்டி விண்ணப்பித்தோர் 8 பேர்களே. 1922இல் பெல் இறந்தபோது அமெரிக்கர்கள் தொலைப்பேசிகளை ஒரு நிமிடம் இயங்காமல் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

So, what do you think ?