ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பால் என்ன பயன்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , ,

நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது. கிட்டத்தட்ட திறப்பதற்கே வாய்ப்பில்லாத பிரபஞ்சத்தின் ஜன்னல் கதவுகளை விஞ்ஞானிகள் திறந்திருக்கிறார்கள். வரலாறு நெடுக இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்கான விழிகளை நாம் புதிதாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறோம். அப்போதெல்லாம் நம்மைப் பற்றியும், நாம் வாழும் இவ்வுலகைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் அடியோடு மாறிக்கொண்டேவருகின்றன. வியாழன் கோளை நோக்கி 1609-ல் கலிலியோ தனது தொலைநோக்கியைத் திருப்பியபோது அந்த

CONTINUE READING …

ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு: அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , , , , , , , , ,

இயற்கை தன்னை ஒருபோதும் ரகசியமாக வைத்துக்கொள்வதில்லை. ஆனால் இயற்கையின் உண்மைகளை அறிந்துகொள்வதில் மனிதர் களுக்குப் போதாமை உள்ளது. அந்தப் போதாமை யால், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கோள் களும் அண்டங்களுமாக உள்ள பேரண்டம் உருவா னது, உயிர்கள் பரிணமித்தது போன்ற பல உண்மை களைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. உயிரினங் களிலேயே இவ்வாறு உண்மைகளைத் தேடும் இயல் பைப் பெற்றிருப்பது மனிதர்கள்தான். ஆனால் மனிதர் களில் மிகப்பெரும்பாலோர், அந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளாதவர்களாக, அல்லது தெரிந்து கொள்ள விடப்படாதவர்களாக மூட நம்பிக்கை

CONTINUE READING …

மதம் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் என்ன சொல்லுகிறார்?

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

நாம் இயற்கையின் பயன்களை அனுபவிக்கிறோம். புதிய புதிய உண்மைகளைக் கண்டறிந்து, பூரிப்படைகிறோம். ஆனால் நம்மால், மனத்தால் இன்னமும் புரிந்து கொள்ள இயலாத ஏதோ ஒன்று இருக்கிறது. அதனுடைய அழகும், மேன்மையும், மறைமுகமாக மங்கலாக பிரதிபலிக்கிறது. இந்த உணர்வுதான் மதத்தன்மை கொண்டது. இந்தப் பொருளில் நான் மதம் சார்ந்தவன் – என்று கூறுகிறார். இதைத்தான் Cosmic Religious Feeling என்றும் சொல்லுகிறார். இந்தக் கூற்று இப்போது உள்ள எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, எந்த மதத்தையும் அவர் சார்ந்தவர் அல்லர்.

CONTINUE READING …

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை  முன்வைத்ததுடன்,  குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும்அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும்,  கோட்பாட்டு  இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கானநோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விஞ்ஞானியான

CONTINUE READING …

அறியவேண்டிய E=mc²

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

நவீன இயற்பியலின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனை பற்றியும் அவருடைய உலகப்புகழ் பெற்ற சமன்பாடான E=mc2 பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கலாம்.  அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜோலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! இந்த சேவையை மட்டும் செய்யவில்லை இந்த சமன்பாடு….விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணுகுண்டால் லட்சக்கணக்கான மனிதஉயிர்கள் நாசமாவதற்ககும் பாதை

CONTINUE READING …