புதிய கல்வி கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறது இந்தியா? ஆழி செந்தில்நாதன்

BY IN Article NO COMMENTS YET , ,

புதிய கல்விக் கொள்கையின் நகல் அறிக்கை, தாய்மொழி வழிக் கல்வி குறித்தும், அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகச் சரியாகவே இனம் கண்டிருக்கிறது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழி வழிக்கல்வி என்று வரம்பு விதிக்கிறது. உயர் கல்வியும் தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் இருந்தாக வேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தில், மக்களின் மொழிகளில் உயர் கல்வி குறித்து இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பது பெரும் குறை. மக்களின் தாய்மொழிகளில் உயர்

CONTINUE READING …

தேசிய கல்விக் கொள்கை : ஆர்எஸ்எஸ் கொள்கையே தவிர வேறல்ல : சீத்தாராம் யெச்சூரி

BY IN Article NO COMMENTS YET , , , ,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிறைவில், மாநிலங்களவையில் 2016ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. உரையின் சாராம்சங்கள் வருமாறு: கல்விக் கொள்கை அல்லது கல்வி அமைப்பு என்பது ஒரு நாட்டின் குணத்தை வரையறுப்பதற்கான அடிப்படையாகும். தேசத்தின் குணத்தை அதுதான் வரையறுக்கிறது. நாம், நமக்காக நாமே அமைத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசை ஒரு

CONTINUE READING …

புதிய கல்விக் கொள்கை – ஒரு பார்வை உதயை மு.வீரையன்

BY IN Article NO COMMENTS YET , , , ,

மந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சில விவாதத் தலைப்புகளை 2015 ஜனவரியில் வெளியிட்டது. நாடு முழுவதும் 2.75 லட்சம் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், வலைதளம் மூலம் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டதாகவும், அதைத் தொகுத்து அறிக்கை தருவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு தயாரித்த அறிக்கை 2016 ஏப்ரல் 30 அன்று மத்திய அரசின்

CONTINUE READING …

இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள் – நா.முத்துநிலவன்

BY IN Article NO COMMENTS YET , , , ,

இந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை – சில உள்ளீடுகள்’ என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில் 99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில், ‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’ – என்று துக்க வீடுகளில் பறை இசைக் கலைஞர்கள் பாடக் கேட்டது நினைவிலாடியது.

CONTINUE READING …

புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம் : ஆயிஷா இரா.நடராஜன்

BY IN Article NO COMMENTS YET , , , , ,

 ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று

CONTINUE READING …

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை! பிரின்ஸ் கஜேந்திர பாபு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , ,

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. தொடக்கக்

CONTINUE READING …

என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்? நா. மணி

BY IN Article NO COMMENTS YET , , , , ,

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகின்றன. மத்திய

CONTINUE READING …

கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை ரோஹித் தங்கர்

BY IN Article NO COMMENTS YET , , ,

 தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

CONTINUE READING …

புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகள்: கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன் -க. தங்கராஜா

BY IN Article NO COMMENTS YET , , , ,

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின் நெடும் பயணம் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வேத கல்வியாகத் தொடங்கி, காலம்தோறும் சீர்திருத்தங்கள், பல்வேறு திணிப்புகளைக் கடந்து, காலனியாதிக்கக் காலத்தில்தான், கல்வி என்பது அனைத்து சமூகத்தினருக்குமானது என்ற எண்ணம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியது. கல்விக்குச்

CONTINUE READING …

எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை? வே.வசந்தி தேவி

BY IN Article NO COMMENTS YET , , ,

 இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, வடிகட்டப்பட்டு, வெளியே தள்ளப்படுகின்றனர். இவ்வாறு இழப்புக்கும்

CONTINUE READING …