பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

Birds Watch Camp

Birds Watch Camp

புதுவை அறிவியல் இயக்கம் பெரல் அமைப்பு இணைந்து 12.02.2016 சனிக்கிழமை  பாகூர் ஏரியில் பறவைகள் உற்றுநோக்கல் மற்றும் கணக்கெடுப்பை நடத்தியது.

உலகம் முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியைப் பல்வேறு அமைப்புகள் இணைந்து கடந்த 2013 ஆண்டுமுதல் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை நடத்தப்படுகிறது. இதில் அமைப்புகள் மட்டுமல்லாது தனிநபர்களும் பங்குபெறுகின்றனர்.

புதுவையில் பெரல், புதுவை அறிவியல் இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாகூரில் இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 37 வகையான பறவையினங்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் கணக்கிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பெரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகனேஷ் புதுவை அறிவியல் இயகத்தின் செயலர் கி.விஜயமூர்த்தி நா.அருண், அகவொளி கார்த்திக், துளிர் இல்ல மாணவர்கள், வ.ஊ.சி மன்ற செயலாளர் ராஜசேகர் உள்ளீட்ட 30 பேர் கலந்துகொண்டனர்.

என்ன செய்தோம்.

ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (GBBC-2016) பிப்ரவரி 12-15-ம் தேதிகளில் உலகெங்கும் நடக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பறவைகளைக் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குப் பார்த்து, அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து eBird (www.ebird.org/india) எனும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

வீடு, பள்ளி, கல்லூரி வளாகத்திலோ பூங்கா, ஏரி, குளம் போன்ற பொது இடங்களிலோ பறவைகளைக் கவனித்து eBird-ல் பட்டியலிடலாம். கல்வி நிறுவனங்கள், மற்ற நிறுவன வளாகங்களில் உள்ள பறவைகளை மொத்தமாகவும் கணக்கெடுக்கலாம். இந்தப் பறவைகள் கணக்கெடுப்பை இந்தியப் பறவைகள் கணக்கெடுப்புக் கூட்டமைப்பு (The Bird Count India Partnership) ஒருங்கிணைக்கிறது.

கடந்த ஆண்டு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பில் நாடெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, 7000 பட்டியல்களைப் பதிவேற்றினர். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 735 பறவையினங்கள்தான், உலகிலேயே இரண்டாவது அதிகப் பறவையினங்கள். அதில் காக்கை, மைனா, குயில், கரிச்சான் ஆகிய பறவைகள் பரவலாக இருப்பதாகத் தெரியவந்தது.

மேலும் விவரங்களுக்கு: http://www.birdcount.in

So, what do you think ?