மறக்கப்பட்ட.. எரிக்கப்பட்ட.. விஞ்ஞானி புரூனோ

BY IN Scientist - அறிஞர்கள் 1 COMMENT , , , , , , , , , ,

Giordano_Brunoஜியார்டானோ புரூனோ.!! நம்மில் யாருக்காவது இந்தப் பெயரைத் தெரியுமா? கேள்விப்பட்ட்துண்டா? ஹூஹீம். எந்தக் குழந்தையும் ஜியார்டானோ புரூனோபற்றி பள்ளிப்பாடப் புத்தகத்தில் படித்தது இல்லை. பொதுவாக யாரும் எந்த பள்ளி ஆசிரியரோ அல்லது பெற்றோர்களோ அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. அவர்களுக்கே தெரியாது என்பதுதான் உண்மை. இந்த உலகத்தால் கொஞ்சம் மறக்கப்பட்ட விஞ்ஞானிதான் ஜியார்டானோ புரூனோ என்ற பெயர்.  ”இந்த உலகம் உருண்டையானது;, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் உண்டாகிறது,; சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் ; சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது; விண்வெளியில் இரவில் தெரியும் விண்மீன்களைப் போன்றே  சூரியனும் ஒரு விண்மீன்.. எல்லா விண்மீன்களுக்கும், பூமிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது” என்ற பலவகையான கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் பகிர்ந்த விஞ்ஞானி ஜியார்டானோ புருனோ அதற்காக அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா? ரோம் நகர கிறித்தவ திருச்சபை புரூனோவை உயிருடன் பட்டாசு கொளுத்தி எரித்துக் கொண்டாடியது!

( 1 January 1548 – 17 February 1600), born Filippo Bruno, was an Italian Dominican friar, philosopher, mathematician, poet, and cosmological theorist. He is remembered for his cosmological theories, which conceptually extended the then novel Copernican model. He proposed that the stars were just distant suns surrounded by their own exoplanets and raised the possibility that these planets could even foster life of their own (a philosophical position known as cosmic pluralism). He also insisted that the universe is in fact infinite and could have no celestial body at its “center”

புரூனோ.! புரூனோ.!

ஜியார்டானோ புரூனோ ஓர் இத்தாலிய தத்துவவாதி, கணிதவியலாளர், வானவியலாளர், மிகச் சிறந்த எழுத்தாளர், எதிராளியை சிலேடையாக நையாண்டி செய்வதில் வல்லவர், நல்ல பேச்சாளர், இறையியலைச் சார்ந்து பேசுபவர், அறிவியலின் கலங்கரை விளக்கமாக இருந்தவர், ஐரோப்பாவின் மிகப் புத்திசாலியான மனிதர் என்று போன்றப்பட்டவர், ஜியோமிதி, மொழியியலில் வித்தகர், மறுமலர்ச்சி இரசவாதி , 14ம் “நூற்றாண்டின் சாக்ரடீஸ்” எனப் போற்றப்பட்டவர், அனைத்திற்கும் மேலாக வானவியல் தந்தை. கலீலியோ கலீலியின் மிக நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறவர். ஆனால் கலீலியோ புரூனோவை நேரில் சந்தித்ததில்லை.

புரூனோ பிறப்பு எப்போது?

இந்தாலிநாட்டில் நேப்பின்ஸ் நகரிலிருந்து 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வெசுவியல் மலைக்குன்றின் வடகிழக்கு சரிவில் உட்கார்ந்திருக்கிறது நோலா என்ற குட்டி நகரம் இதன் அருகில் உள்ள “சிசுலா” என்ற கிராமத்தில் கி.பி.154ல் புரூனோ பிறந்தார் நோலாவில்தான் சால்டிய கிரேக்கர்கள் முதன்முதல் காலனி அமைத்தனர் ரோமானியப் பேரரசுகளின் காலத்திய முக்கிய நகரங்களில் நோலாவும் ஒன்று உயர்குடி மக்கள் எனப்படும், கிறித்தவ திருச்சபையின் துறவிகள் மடங்களும் இங்குதான் கட்டப்பட்டன. இப்படி வரலாற்ற சிறப்பு மிக்க இடத்தில், “பாராசல்ஸ்“ என்ற வேதியல் விஞ்ஞானி, உலகை விட்டு மறைந்த பிறகே, புரூனோ இந்த உலகைக் காண வந்தார். புரூனோவின் பிறப்ப இரண்டு காரணங்களால் முக்கியத்துவப்படுத்தப்பட்டது. ஜீசஸ் சமூகத்தின் முதல் ஜெனரலான “லபோராதேய” பதவிஏற்பு இப்போது தான் ஏற்பட்டது.

இளமைக் காலம்

கிறித்தவ திருச்சபையின், புனிதநீர், குழந்தை புரூனோ மேல் தெளிக்கப்பட்டது. “பிலிப்யோ புரூனோ” என்ற கத்தோலிக்க கிறித்தவப் பெயர் சூட்டப்பட்டது. புரூனோவின் தந்தை பயோவான்னி புரூனோ. இவர் ஸ்பானிஷிய இராணுவ அதிகாரி. தாயைப்பற்றியம் பிறந்த மாதம், நாள் எதுவும் சரியாக தெரியப்படவில்லை. 8வயதில் நோலாவில் உள்ள பள்ளிக்கு கல்வி பயில அனுப்பப்பட்டார். 1561ல் மதக்கல்வி பயிலவும், கிறித்தவ போதகராகவும் டொமினிகனிலுள்ள துறவிகள் மதத்திற்குச் சென்றார். அங்குள்ள பாதிரிகளிடமும், சகோதரர்களிடம் தத்துவம், இறையியல், அறிவியல் போன்றவற்றில் அனுபவமும், அறிவும் பெற்றார். அஙகுள்ள துறவி ஒருவரின் மேலுள்ள ஈடுபாட்டாலும், கிறித்தவ திருச்சபையாலும், “பிலிப்போ புரூனோ” என்ற பெயரை “ஜியார்டானோ புரூனோ” என மாற்றிக்கொண்டார். ஜியார்டானோ புரூனோ 1575ல் டொமினிகளில் கிறித்தவ புனித துறவி பாதிரியார் ஆனார்.

மன மாற்றம் இயற்கை ஆய்வு!

புரூனோ எதனையும் வெளிப்படையாகப் பேசுபவர். கத்தோலிக்க கற்பித்தலில் உள்ள அறிவின் ஆதாரம் அறியும் முறை, நடைமுறையற்ற பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆராய்ந்தார் விளைவு மதத்துரோகம் மற்றும் கிறித்தவ திருச்சபையை எதிர்க்கிறார் என குற்றமும், பட்டமும் சூட்டப்பட்டார் 1576ல் கிறித்தவ துறவி வாழ்க்கையை முடிக்கவேண்டியதாகி விட்டது. அறிவைப் பற்றிய காதலும், அறியாமைபற்றிய வெறுப்பும் புரூனோவை ஒரு புரட்சியாளனாக மாற்றியது. பாரம்பரிய அதிகாரத்தை ஒத்துக்கொள்ள மறுத்தார். இதனால் தனிமைப்படுத்தப்ட்டார். இதன் விளைவாக நாடோடியாக பல நாடுகளில் அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் உண்மைகளை வெளியிடுவதில் தயக்கம் காண்பிக்க வில்லை. அதில் ஒன்றுதான் சூரியனை மையமாகக் கொண்டு, பூமி சுற்றுகிறது என்பதும்.!

நிக்கோலஸ். புரூனோ. தூண்டுதல்.

புருனோ, அறிவியல் கண்டு பிடிப்புகள் எதுவும் செய்யவில்லை. அவருக்க முன் வாழ்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸின் கொள்கையான பிரபஞ்ச மாதிரியை அறியமுற்பட்டார். ஜியார்டானோ புரூனோவினர் விவாதரீதியான, அறிவியல் தேடும் ஆதார கருத்துக்கள், 20ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின், தத்துவவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் தூண்டுதலாக இருந்தது.

அறிவியலின் இருண்ட காலம்!.

நோலா டொமினிக்கனிலிருந்து, புரூனோ 1579ல் ஜெனிவா சென்று ஆசிரியராக பணியாற்றினார். மொழியியலிலும், வாதத் திறமையிலும், நக்கல் பேச்சிலும் வல்லவர். பாரம்பரிய கிறித்தவ கருத்துக்களுக்கும், அர்ஸ்ட்டாட்டில் கொள்கைகளுக்கும் எதிராகப் பேசியவர். புரூனோ வாழ்ந்த காலம் என்பது தத்துவம், அறிவியலிடமிருந்து விவாகரத்து பெற்ற காலகட்டம்! 16ம் நூற்றாண்டு அறிவியலின் இருண்ட காலம் என்று சொல்லப்படுகிறது. விஞ்ஞானிகள் தங்களின் விஞ்ஞானக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல், ரகசியமாக ஒளித்து வைத்துக்கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட காலம் அது. அப்போது வாழ்ந்த, புரூனோ, கலீலியோ போன்ற விஞ்ஞானிகள் வானவியலின் உன்மைகளைச் சொல்லப் பயந்து. பின் சொல்லியதால் சித்திரவதைப்பட்ட காலம் இது.

மொழியியல். வித்தகர். போதகர்.!

புரூனோ, ஜெனிவாவிலிருந்து டௌலோவ்விற்குச் சென்றார். அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி முதுகலை பட்டம் பெற்றார். கற்பித்தல் மற்றும் தொழிலையும் தொடர்ந்தார். அரிஸ்டாட்டில் பற்றிய உரைகளை விமர்சனமும் செய்தார். அப்போது உலகமக்களின் கருத்துக்கள் தத்துவஞானி அரிஸ்டாட்டிலின் கைகளுக்குள் சிக்குண்டு கிடந்தது. ஒருவிஷயம் அரிஸ்ட்டாட்டில் சொன்னார் என்பதற்காகவே நம்பப்பட்டது. 1300களில் வாழ்ந்தவர் அரிஸ்டாட்டில். “ பூமி தட்டையானது சூரியனும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றி வருகின்றன” என்ற கொள்கையை விதைத்தவர் அரிஸ்ட்டாட்டில். மேலும் பெண்களுக்கு ஆண்களைவிட பற்களின் எண்ணிக்கை குறைவு என்றும் சொன்னவர். எனவே புரூனோ, அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை மாற்றி விளக்கம் சொல்லி சுமார் 120 கட்டுரைகள் வெளியிட்டார். இவை ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கருத்தையும் கூட மறுத்தன. விளைவு புரூனோ டௌலோவ்லீயிருந்து பிரான்ஸ் நோக்கி 1581 பயணம் செய்ய வேண்டியதாகி விட்டது.

பிரபஞ்சக் கருத்து வெளியீடு மதவாதிகள் எதிர்ப்பு!

புரூனோ பிரான்சிலுள்ள பாரிசில் அரசர் மூன்றாம் ஹென்றியின் ஆதரவுடன் தங்கினார். இங்கே புரூனோவின் நாவன்மையால் 80 நண்பர்கள் உருவானார்கள். எளிதில் இவர்களைச் கவர்ந்தார். இவர்கள் அனைவரும் கடவுள் தொடர்பான மாயமந்திரக்கலையில் நம்பிக்கை உள்ளவர்கள். மாயமந்தரத்துடன், நினைவுக்கலையை பலப்பல வடிவங்களில், முறைகளில் சொல்லித்தந்தார். ரேமாண்டுலாலி பற்றியும், நினைவுக்கலையின் அற்புதம் பற்றியுமான இவரின் முதல் எழுத்து வெளியீடுகள் பாரிசில்தான் நிகழ்ந்தன. பின் 1582ல் புரூனோ தன் 34வது வயதில் இங்கிலாந்து சென்றார். அங்கே “ காஞ்டெலாஜோ” என்ற நண்பரின் உதவியுடன், இங்கிலாந்து அரசியை அணுகினார். அவரைப் புகழ்ந்து பேசினார்:, எழுதினார். இங்கிலாந்தில் 2 ஆண்டுகள் வாழ்நதபோதே அவரது சிறந்த எழுத்துக்கள் வெளியிடப்பட்டன. இங்கே பிரபஞ்சம் பற்றிய புதுக்கருத்தினை வெளியிட்டார். இங்கேதான் பிறந்தது கலகம்.

பிரபஞ்ச ஆசான் புரூனோ!

பிரபஞ்சம் எல்லையற்றது முடிவற்றது பிரபஞ்சத்தின் ஒரு பகுதிகள் சூரிய குடும்பம். அதுமட்டுமல்ல பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனாலேயே இரவுபகல் உண்டாகிறது. சூரியன்என்பது இரவு வானத்தில் தெரியும் விண்மின்போல ஒன்றுதான். சூரியன்தான் பூமிபோன்ற கோள்களின் மையம். இவையனைத்தும் சேர்ந்தது சூரிய குடும்பம். வானில் தெரியம் விண்மீன்களுக்கும் இதே போன்ற கோள்கள் உண்டு. சூரிய குடும்பம் என்பது பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு. விண்மீன்கள் பிரபஞ்ச வெளியில் விரவிக்கிடக்கின்றன விண்மீன்கள் இயற்பியல் விதிப்படி இயங்குகின்றன. விண்மீன்களுக்கு இடையே ஈதர் என்ற காற்று உள்ளது. என பல கருத்துக்களை விதைத்தார் புரூனோ. உலகில் புவிமையக் கொள்கையை முதன் முதலில் நேரிடையாக எதிர்த்த முதல் தத்துவ ஆவான் ஜியார்டானோ புரூனோ.

கடவுள் இல்லை! இயற்கையே அனைத்தும்!

புனோவின் கடவுள் பற்றிய தத்துவம் வித்தியாசாமானது. கடவுள் விண்மீன்களின் எல்லை தாண்டி சொர்க்கத்தில் இல்லை. உயிரில் உள்ள அனைத்து பொருட்களிலும் இயல்பாகவே நீக்கமற நிறைந்திருக்கிறார். கடவுளை அனைவராலும் உணரமுடியம். உலகம் நீர், பூமி, காற்று, நெருப்பு என்ற 4 பொருட்களால் ஆனது. இதே பொருட்கள் தான் ஒரேமாதிரியாய் பிரபஞ்சம் முழுவதும் பரந்துபட்டு விரிந்து கிடக்கிறது. எல்லையற்ற இறைவன் எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்துள்ளார் என்று தெரிவித்தார் புரூனோ. ஆனால் அண்டம் என்பது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. கடவுளுக்கும் சொர்க்கத்துக்கும் எந்த உறவும் கிடையாது என்றார்.

Bruno lecturing at Oxford.

வால்மீன் பற்றி முதலில் சொன்னவர்!

ஜியார்டானோ புரூனோ வால்மீன்கள் பற்றி ஏராளமாய் எழுதியுள்ளார். “பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் வால்மீ.ன் குறுகிய வாழ்நாள் உடைய உற்பத்திதான் வால்மீன் என்பவை. இவையும் கூட புனித சொர்க்கத்தின் ஒரு பகுதியே. ஒவ்வொரு வால்மீனும் ஓர் உலகம் தான். ஆனாலும் கூட, வால்மீன்களும் நிரந்தர வான்பொருட்கள்தான். இவையும் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற 4 அடிப்படைப் பொருட்களால் உண்டானவை” என்ற கருத்தினையே கொண்டிருந்தார் புரூனோ.

புத்தக வெளியீடுகள்!

   புரூனோ 1577 – 86 ம் ஆண்டுகளில் அறிவியல். தத்துவம் இறையியல் பற்றி    பல்வேறு  வகையான கருத்துக்களுடன் 20 புத்தகங்கள் வெளியிட்டார். இதன் விளைவாக புரூனோ பல எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதே காலகட்டத்தில் ரோத்தள் என்பவரும் 1587ல் டைகோபிராசி என்ற விஞ்ஞானியும், எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி கருத்துக்களை வெளியிட்டனர். புரூனோ காலத்து வானவியலாளர்கள் சிலர் சூரிய மையக் கொள்கையை ஒத்துக் கொண்டனர். ஆனால் புருனோ என்றும் தன்னை வானவியலாளராக ஒப்புக் கொண்டதே இல்லை.

காட்டிக்கொடுக்கப்பட்ட புரூனோ!

பல்வேறு மத எதிர்ப்பு காரணம் காட்டி புரூனோ 1585ல் கட்டாயமாக பாரிசிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார். பின் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரம் சென்றார் அங்கே லத்தீன் மொழியில்,“நினைவுக்கலை” தொடர்பாகவும், வானவியல்பற்றியும் நிறைய கவிதைகள் எழுதினார். 1591ல் மீண்டும் இத்தாலிக்க நண்பர்கள் புத்தக சந்தையில் பங்குபெற புரூனோவை அழைத்தனர். நினைவாற்றல் கணக்கை சொல்லித்தரவும், அதன்மாய மந்திரங்களை அறியவுமே புரூனோ வரவழைக்கப்பட்டார். அங்குள்ள படுவா, ஊரிpல் ஆசிரியர் பணி புரியவும் விரும்பினார் கலீலியோ அங்கு வந்தார் வெனிஸீக்குத் திரும்பினார். நண்பர் மைசிங்கோ எதிர்பார்த்தபடி மாயங்கள் எதுவும் சொல்லித்தரவில்லை. ஏமாந்த மைசிங்கோ, மதத்துவேஷம் என்ற போர்வையில் கிறித்தவ திருச்சபையிடம் புரூனோவைக் காட்டிக் கொடுத்தார்.

சிறையில் புருனோ!

புரூனோ கிறித்தவ திருத்ச்சபையை எதிர்த்து பிரச்சாரம் செய்தமைக்காகவும், மதத்துவேஷ கருத்துக்களுக்காகவும் 1592ம் ஆண்டு மே 22ம் நாள் கைது செய்ய்ப்பட்டார். 1593ல் ரோமிற்கு கொண்டுவரப்படார். அன்றைய போப் மூன்றாம் கிளமெண்டிடம், சமரசம் ஏற்படலாம் என புரூனோ நம்பினார். புரூனோவின் வாதமும், மொழித்திறமையும் அங்கு எடுபடவில்லை. தோல்வியுற்றார். ரோம்நகரில் 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இடையிடையே நீதி விசாரணை திருச்சபைக்கு ஆதரவாகவே நடந்தது. ஜனவரி 8ம் நாள், 1600ல், தனியார் நிர்வாகிகளிடம், மதத்துவேஷ குற்றத்துக்காக எரிக்க புரூனோ ஒப்படைக்கப்பட்டார். 1600ம் ஆண்டு பிப்ரபரி 17ம் நாள், புரூனோவை உயிருடன் எரிக்க ஆணையும் பிறந்தது.

கொலைத்தண்டணையின் கொடுரம்!!

    புரூனோவின் எரிப்பு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் பிப்ரவரி 17, 1600 அவரது அறிவியல் யல்பாடுகளுக்காகவும், மனித நேயத்துடனும், தண்டனை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகள் கொஞ்சம் கருணையுடனும் செயல்பட்டனர். புரூனோமேல் இரக்கம் கொண்டு இவர் கழுத்தைச் சுற்றி வெடிகுண்டுப் பொடியைத் தூவினர். இது அதிக வேதனையின்றி, உயிர் முடிய உதவி செய்யும். ஆனாலும் கூட தண்டனையில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது நாக்கும், தாடையுடன் சேர்த்து ஆணியடிக்கப்பட்டது. புரூனோ பேசாம இருப்பதற்காக. ஏசு நிலுவையில் அறையும் போது செய்யப்பட்டது போலவே ஒரு நீண்ட குச்சியில் கட்டையில் அறையப்பட்டார் புரூனோ முகத்தில் இரும்புக் கவசம் மாட்டப்பட்டது. இவரைச் சுற்றி குச்சிகள் போடப்பட்டன. இவையனைத்தும் “கம்ப்போ டே ப்யோரி” என்ற ரோமனின் புகழ்பெற்ற சதுக்கத்தில் அனைவரும் பார்க்கும்படியே நடைபெற்றது.  ஜியார்டானோ புரூனோ உயிருடன் எரித்து கொலைசெய்யப்பட்டார் கிறித்தவ திருச்சபையில் அவரது உயிர் போயிற்று. ஆனால் அவரின் புகழ் மறையவில்லை.

இறப்புக்குப் பின்னும் வாழும் புரூனோ!

புரூனோ கொலைசெய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்குப்பின் 1603ல் இலண்டாம் ஜான்பால் போப்பாக பதவிஏற்றார் புரூனோவின் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார் புரூனோ வானவியல் கருத்துக்களுக்காக கொளுத்தப்படவில்லை, கடவுள் மறுப்பு கொள்கைகளுக்காகவே தீயிடப்பட்டார். இவரின் மரண கொலைத் தண்டனையின் காரண பதிவேடுகள்  மட்டுமே காணப்படவில்லை.Statue dedicated to Giordano Bruno          கொலையின் காரணம் துல்லியமாக தெரிவிக்கபப்டவில்லை புரூனோ உலகைவிட்டுப் போன 7 ஆண்டுகளுக்குப்பின் அவருக்கான சிலை நோலாவில் வைக்கப்பட்டது. சந்திரனின் காணப்படும் கிரேட்டர்கள்ஃபள்ளத்தாக்குகளில் ஒன்றுக்கு “ஜியார்டானோ புரூனோ”என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் 20 கி.மீ உடல் பிரிந்தாலும் புருனோவின் கருத்துக்களே 20ம் நூற்றாண்டின் விஞ்ஞானிகளுக்கு வானவியல் பற்றிய விதைகளாக விளை நிலங்களாக வெளிப்பட்டன.

– பேரா.சோ.மோகனா (mohanatnsf@gmail.com)

One Comment

  1. Balasubramaniam |

    கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்ற கண்டுபிடிப்பு சொன்னதற்கு கல்லால் அடித்து அவமானப்படுத்தியது உண்மையா?

    Reply

So, what do you think ?